2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் போது தன்னைகத் தரைகுறைவாக நடத்தியது குறித்து விராட் கோலி வெளிப்படைப் பேச்சு

0
1826
Virat Kohli Omni Van

விராட் கோலி தலைமையிலான அண்டர் 19 இந்திய அணி 2008ஆம் ஆண்டு ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த தொடரில் விராட் கோலியின் கேப்டன்சி மிக அற்புதமாக இருந்தது. விராட் கோலியின் பெயர் பெரிய அளவில் அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்க்கப்பட்டது. அண்டர் 19 உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன் அந்த ஆண்டு முதல் முறையாக பிசிசிஐ தலைமையிலான ஐபிஎல் தொடரும் ஆரம்பமாகியது.

அண்டர் 19 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக விளையாடிய விராட் கோலியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். 207 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இதுவரை 5 சதங்கள் மற்றும் 42 அரை சதங்கள் உட்பட 6283 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 37.4 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.95 ஆகும்.

- Advertisement -

தன்னால் மறக்க முடியாத கசப்பான தருணம்

2008 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் நடந்த முடிந்தவுடன் நான் பெங்களூரு அணி நிர்வாகம் மூலமாக கைப்பற்றப்பட்டேன். அப்போது நான் அண்டர் 19 வீரர் தான். பெங்களூரு அணியில் ராகுல் டிராவிட், ஜாகிர்கான் கெவின் பீட்டர்சன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தனர்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை என்னை ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஆம்னி காரை அனுப்பி வைத்தனர். அணி வீரர்கள் அனைவரும் நல்ல காரில் ஏர்போர்ட்டுக்கு சென்றுவிட நான் மட்டும் மீதம் இருந்த நிலையில், எனக்கு ஏதேனும் ஒரு காரை அவர்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி என்னை ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்னி கார் வந்தது.

என்னை மன்னித்து விடுங்கள் அந்த கார் நல்ல நிலையிலும் இல்லை. ஏதேனும் ஒரு கார் என்றாலும் கூட நல்ல நிலையில் இருக்கும் கார் வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் அன்று அவ்வாறு நடந்தது கசப்பான அனுபவம் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.

- Advertisement -

என்னை முன்னணி வீரர்கள் பிரித்துப் பார்க்கவில்லை

அணியில் ராகுல் டிராவிட் ஜாகீர்கான் கெவின் பீட்டர்சன் போன்ற அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் நிறைய பேர் இருந்தனர்.நான் அப்பொழுது இளம் வீரர் என்பதால் சற்று தயங்கிய நிலையிலேயே இருப்பேன். ஆனால் அவர்கள் அனைவரும் என்னிடம் இயல்பாகப் பழகி எந்தவித பாகுபாடுமின்றி நட்பு பாராட்டினார்கள்.

பின்னர் அவருடன் இணைந்து உணவு அருந்துவது மற்றும் போட்டியை குறித்து விவாதிப்பது என நாட்கள் அப்படியே நகர்ந்து சென்றது. எங்களுக்குள் இருந்த நட்பும் படிப்படியாக வளரத் தொடங்கியது என்று விராட் கோலி கூறியுள்ளார்.