சச்சின், ஜெயவர்தனே ரெக்கார்டை உடைக்க இரண்டாவது போட்டியில் விராட் கோலிக்கு அருமையான வாய்ப்பு.. இதைமட்டும் செய்தால் போதும்!

0
1156

இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜெயவர்த்தனே இருவரின் சாதனைகளை முறியடிக்க விராட் கோலிக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, கில் இருவரும் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி சிறந்த பார்மில் இருக்கின்றனர். விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்கள் அடித்து, சர்வதேச போட்டிகளில் 45வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி இந்தியாவில் அடிக்கும் 20 வது சதம் இதுவாகும். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இந்திய மைதானங்களில் 20 சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இன்னொரு சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இரண்டாவது ஒருநாள் போட்டி நல்ல வாய்ப்பாக இருக்கும்.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முந்தைய இடத்தில் வெறும் 66 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்த்தனே ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இந்த சாதனையையும் முறியடிக்க விராட் கோலிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

மகிலா ஜெயவர்த்தனே 12,650 ரன்கள் அடித்திருக்கிறார். விராட் கோலி 12,584 ரன்களில் இருக்கிறார்.

கூடுதலாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்து வீரர் என்ற புதிய உலக சாதனையை படைப்பார். இதற்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்சமாக 9 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கிறது.

விராட் கோலி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராகவும், சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் ஒன்பது சதங்கள் அடித்திருக்கின்றனர். இதனை முறியடிக்க விராட் கோலிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. பேட்டிங் செய்ய மைதானம் ஏதுவாக இருக்கும் என்பதால் விராட் கோலி இந்த சாதனைகளை படைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.