என்ன ஒரு ஒற்றுமை.. சச்சின் செய்த சாதனை..அதே இன்னிங்சில் தொட்ட விராட்.. அப்போ அது நடக்குமா?

0
188

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் அடித்த நிலையில் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 289 ரன்களை எடுத்து மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.

- Advertisement -

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 191 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. சுப்மன் கில் சதம் விளாசிய பிறகு ஆட்டம் இழந்துள்ளார். தற்போது களத்தில் விராட் கோலி 59 ரன்கள் உடனும் ஜடேஜா பதினாறு ரன்களுடனும் களத்தில் உள்ளார்.இதன்மூலம் 15 இன்னிங்ஸ்க்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் நான்காவது பேட்டிங் வரிசையில் களம் இறங்கி அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த மைல் கல்லை விராட் கோலி தொட்ட அதே இன்னிங்ஸில் தான் சச்சின் டெண்டுல்கர் பெற்று இருக்கிறார்.

இதில் ஒரு ஒற்றுமை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்த மைல் கல்லை ஏட்டி இருந்தார். தற்போது அதேபோல் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைல்கள்ளை தொட்டு உள்ளார்.

- Advertisement -

இந்த சச்சின் ஒன்பதாயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை தொட்ட போது இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்தார். இதனால் விராட் கோலி நாளை இரட்டை சதுரம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாளை மட்டும் இந்திய அணி ஒரு 350 ரன்கள் கூடுதலாக அடித்தால் நிச்சயம் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

அதற்கு விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். இதேபோன்று ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர், கே எஸ் பரத் அக்சர்பட்டேல், அஸ்வின் ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.இதேபோன்று விராட் கோலி மேலும் இரண்டு மைல் கல்லை தொட்டுள்ளார்.

அதன்படி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் நான்காயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்  பிரைன் லாராவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தையும் விராட் கோலி பிடித்திருக்கிறார்.