தென் ஆப்ரிக்கா டி20 தொடருக்கு விராட் கோஹ்லி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வு ? பிசிசிஐ அறிவிப்பு

0
4666
Virat Kohli

ஐ.பி.எல் தொடர் ஏறக்குறைய 75% முடிந்து விட்டது. இதற்கடுத்து நடைபெற உள்ள தொடர்களிலும், செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளது. ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா இங்கு ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது. இதற்கடுத்து இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்கிறது. அங்கிருந்து நேராக வெஸ்ட் இன்டீஸ் செல்கிறது. இதற்கடுத்து செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு, அக்டோபரில் பயணப்பட உள்ளது. இதையெல்லாம் வைத்து இந்திய கிரிக்கெட் வாரியம் தன் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் இந்திய மூத்த மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருக்கும் போது, அதேசமயத்தில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் செயல்பாடு படுமோசமாய் இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கவலையடைய வைத்துள்ளது. குறிப்பாக விராட்கோலி, ரோகித் ஷர்மாவின் பேட்டிங் பார்ம் படுமோசமாய் இருக்கிறது. இவர்கள் இருவரது பேட்டிங் ஆவ்ரேஜீம், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினின் பேட்டிங் ஆவ்ரேஜை விட குறைவு!

- Advertisement -

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடர் முடிந்து, ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்து வெளிவந்துள்ளது. ரவிசாஸ்திரி, மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்களும் விராட் கோலிக்குத் தற்காலிகமாக ஒரு ஓய்வு தேவையென்று கூறி வருகிறார்கள். இந்தச் செய்தி நடக்கவே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இந்திய வீரர்கள் அதிகப்படியான போட்டிகளில் விளையாடுவதோடு, கடுமையா பயோ பபுளிலும் இருப்பதால், அதிகப்படியான உடல், மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள். இதனால் இந்திய நட்சத்திர வீரர்களான ரோகித் ஷர்மா, கே.எ.ராகுல், பும்ரா, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்களுக்குமே ஓய்வு தரப்படலாம் என்று தெரிகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிகிறது!