ஐசிசி டி20 தரவரிசையின் டாப் 10 வீரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ள விராட் கோலி ; ஹாட்ரிக் அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம்

0
665
Shreyas Iyer and Virat Kohli

கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. அதன் பின்னர் தற்போது இலங்கை அணியையும் 3-0 என வீழ்த்தி நம்பர் டி20ஐ அணியாக நீடித்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்ற முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி இம்முறை இலங்கைக்கு எதிரான போட்டிகளில் விலகிக் கொண்டார்.

அவரின் இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், மூன்று போட்டிகளில் தொடர்ந்து அரை சதம் விளாசிய அசத்தினார். 173 எனும் அபார ஸ்ட்ரைக் ரேட்டில் 204 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இதொடருக்குப் பின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. தொடர் முழுவதும் பங்கேற்காத கோஹ்லி டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருந்து வெளியேறி 15வது இடத்திற்கு சென்றுள்ளார். இது விராட் கோஹ்லி ரசிகர்களிடையே வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

ஆட்டநாயகன் ஷ்ரேயாஸ் ஐயர் 27 இடங்கள் தாவி 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கோஹ்லியைப் போல தொடர் முழுவதும் விளையாடாத கே.எல்.ராகுல் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இரண்டாவது டி20ஐ போட்டியில் அபாரமாக ஆடி 75 ரன்கள் குவித்த இலங்கை தொடக்க வீரர் நிஷங்கா 9வது இடத்திற்கு சென்றுள்ளார். பந்துவீச்சு துறையில் புவனேஷ்வர் குமார் 17வது இடத்தை அடைந்துநிஷங்கா

டி20ஐ கிரிக்கெட்டில் டாப் 10 வீரர்கள் :

பேட்ஸ்மேன் : பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், எய்டன் மார்க்ரம்,

பந்துவீச்சாளர்கள் : ஷம்சி, ஹேசல்வுட், ஆதில் ரஷித்

ஆல்ரவுண்டர்கள் : முஹம்மது நபி, ஷகிப் அல் ஹாசன், மொயின் அலி