விராட் கோலி இடம் தன்னம்பிக்கை இல்லை; பாகிஸ்தான் வீரர்!

0
90
Virat kohli

உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சராசரி 50 என்று தனி ஒரு ராஜாவாக வலம் வந்தவர் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி. நவீன கிரிக்கெட்டில் இந்த விதத்தில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது.

ஆனால் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அவரிடமிருந்து சதங்கள் வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அரை சதங்கள் வருவதும் நின்றது. அதற்கடுத்து இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் அவர் 3 முறை தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு அவரது பேட்டிங் ஃபார்ம் சரிந்தது.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது அவரின் பேட்டிங் இந்த நிலைமைக்கு ஆகும் என்று யாராவது ஆருடம் சொல்லி இருந்தால் அவரை இந்த மொத்த உலகமும் திட்டித்தீர்த்த இருக்கும். விராட் கோலியை இப்படி ஒரு மோசமான பேட்டிங் ஃபார்மில் யாருமே யோசித்து பார்த்ததே கிடையாது.

இதனால் மீண்டும் அவர் பழைய பேட்டிங் பார்முக்கு திரும்ப அவருக்கு ஒரு தற்காலிக ஓய்வு தேவை என்ற கோரிக்கை வெளியிலிருந்து அதிகமாக எழ ஆரம்பித்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விராட் கோலிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு அளித்தது.

இதையடுத்து ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்ற விராட் கோலி அணிக்குத் திரும்பினார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் அவர் 34 பந்துகளை சந்தித்து 35 ரன்களை எடுத்தார். ஆனால் ஒரு தவறான நேரத்தில் ஒரு தவறான ஷாட் அடித்து ஆட்டம் இழந்தார். அவர் எந்தவிதமான திணறலும் இல்லாமல் பழைய முறையில் பேட்டிங் செய்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

- Advertisement -

தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் இன்சமாம் உல் ஹக் கூறும்பொழுது ” விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருந்ததை நான் அவர் ஆடும் பொழுது பார்த்தேன். இவர் 35 ரன்கள் எடுத்து நன்றாக செட் ஆகி இருந்தார். அவர் ஒரு மிகவும் திறமையான வீரர் அவர் செட் ஆகி விட்டால் அவரை ஆட்டமிழக்க செய்வது கடினமான விஷயம். அவர் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ஆனால் நேற்று அவர் தன்னம்பிக்கை இல்லாமல் ஆடி ஆட்டம் இறந்ததை பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியிருந்தார்.

இதை ஆமோதிப்பது போல இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் வீரேந்திர சேவாக் கூறும்பொழுது ” அணியுடனான போட்டியில் அவர் பார்முக்கு திரும்புகிறார் என்று தோன்றியது. அவர் பேட்டிங்கின் மீது தான் மொத்த பார்வையும் இருந்தது. ஆனால் அவர் பார்ம்க்கு திரும்பவில்லை. அவர் ரன் அடிக்கிறார் ஆனால் அது பழைய முறையில் இல்லை. டி20 உலகக் கோப்பை நெருங்கி கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர் மீண்டும் திரும்பி பழைய நிலைக்கு வர வேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய விருப்பமும் ஆகும்” என்று கூறினார்.