விராட் கோலி சச்சின் கிடையாது; சச்சின் கூட ஒப்பிடாதீங்க; கம்பீர் ஓபன் டாக்!

0
619
Gambhir

மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் தற்போது ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டியில் கவுகாதியில் இந்திய அணி இன்று மோதி வருகிறது!

இன்று நடந்த முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, கில் ஆகியோரது அரை சதங்களுடன் மற்றும் விராட் கோலியின் சதத்துடன் 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்துள்ளது!

ஆயிரம் நாட்களுக்கு மேல் கழித்து விராட் கோலி இந்தியாவில் தனது சதத்தை இன்று அடித்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இது அவருக்கு 45 ஆவது சதமாகும். மேலும் இது அவருக்கு ஒட்டுமொத்தமாக 73 வது சர்வதேச சதம் ஆகும்!

சதங்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் சச்சின் ஒருநாள் போட்டிகளில் 49, டெஸ்ட் போட்டிகளில் 51 என நூறு சதங்களைக் குவித்து மாபெரும் உலகச் சாதனையை கிரிக்கெட்டில் நிகழ்த்தி இருக்கிறார். தற்பொழுது இந்தச் சாதனையை உடைக்கக்கூடிய இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் விராட் கோலி மட்டும் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விராட் கோலியை இந்த காரணத்திற்காக சச்சின் உடன் ஒப்பிட கூடாது என்று கொஞ்சம் கடுமையாகவே இந்திய அணியின் முன்னாள் இடது கை துவக்க ஆட்டக்காரர் கம்பீர் கூறியிருக்கிறார்.

இதற்கு அவர் காரணமாகக் கூறும் பொழுது ” சச்சின் உடைய காலத்தில் பவர் பிளே முடிந்து ஐந்து பீல்டர்கள் வெளியே நிற்கலாம். ஆனால் தற்போது நான்கு பீல்டர்கள் மட்டும்தான் பவர் பிளே முடிந்து 40 ஓவர்கள் வரை வெளியே நிற்க முடியும். இது விளையாடுவதற்கு எளிதானது எனவே சச்சின் உடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது!” என்று கூறியிருக்கிறார்!