விராட் கோலிக்கும் இந்த பாகிஸ்தான் பிளேயருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு; பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி!!

0
109

விராட் கோலிக்கும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலிக்கும் ஒரே ஒற்றுமை இருக்கின்றது என பாக்., முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தாமல் அவ்வபோது ஒரு அரைசதம் மட்டுமே அடித்து மோசமான நிலையில் விளையாடி வருகிறார். தொடர்ச்சியான சதங்களுக்கு பெயர்போன இவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்களை அடித்திருக்கிறார். 

- Advertisement -

குறுகிய காலகட்டத்தில் அதிக சதங்கள் அடித்ததால் இவர் மீது பெரிதளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பெரிதளவில் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பு இரண்டிலும் சோபிக்கவில்லை. அதிக மன அழுத்தத்திற்கு ஆளான இவர் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து முதலில் விலகிக் கொண்டார். பின்னர் லிமிடெட் ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார். 

சமீபகாலமாக விராட் கோலியின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகும் அளவிற்கு உள்ளது. இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரில் மிக மோசமாக விளையாடிய இவருக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு சூழலில் விராட் கோலி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் மற்றொரு பாகிஸ்தான் வீரருடன் ஒப்பிட்டு புதிய கருத்தினை முன் வைத்திருக்கிறார்.

Hassan ali and virat kohli

“விராட் கோலி இந்திய அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். அவர் வெளியில் சொல்லவில்லை. ஆனால் அவரது ஆட்டத்தில் நன்றாக வெளிப்படுகிறது. இதேப்போன்ற ஒரு மனநிலையில் தான் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி இருந்தார். அவருக்கு அணி நிர்வாகம் உரிய நேரத்தில் சிறிது ஓய்வு கொடுத்து நல்ல நிலைமைக்கு வந்தவுடன் அணிக்கு திரும்புங்கள் என்று அறிவுரை கூறியது. மீண்டும் பாகிஸ்தான் அணிக்குள் வந்த அவர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அப்படியொரு ஓய்வினை விராட் கோலிக்கு இந்திய நிர்வாகம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவ்வபோது கொடுக்காமல் தொடர்ச்சியாக சில மாதங்கள் கொடுத்து மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தால் அவரால் முன்பு போல் விளையாட முடியும். பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.” என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஆசியக்கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. ஓய்வில் இருக்கும் விராட் கோலி ஆசியகோப்பை தொடரின்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.