ஐபிஎல் 2024

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்.. விராட் கோலி படைத்த மெகா சாதனை.. தொடரும் ரன் வேட்டை

இன்று ஐபிஎல் தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 92 ரன்கள் குவித்த விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இன்றைய போட்டியில் எந்த அணி தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியிருந்தது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் மற்றும் துவக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிசிஸ் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். வில் ஜேக்ஸ் 7 பந்தில் 12 ரன் எடுத்தார். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார் இருவருக்கும் மிக எளிதான இரண்டு கேட்ச் வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தது. இதற்கு அடுத்து அதற்கான விலையை அந்த அணி கொடுத்தது.

விராட் கோலி மற்றும் ரஜத் பட்டி தார் இருவரும் இணைந்து 32 பந்தில் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 23 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. விராட் கோலி 47 பந்தில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 46 பந்துகளில் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதையும் படிங்க : நான் விக்கெட் எடுத்தால் பெருசா கொண்டாட மாட்டேன்.. காரணம் சின்ன வயசுல கிடைச்ச இதுதான் – சுனில் நரைன் பேட்டி

அடுத்து தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 18 ரன்கள், கேமரூன் கிரீன் 27 பந்தில் 46 ரன்கள் எடுக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. ஹர்ஷல் படேல் மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் விராட் கோலி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்கள் கடந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் மூன்று அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார். இந்த வகையில் ஐபிஎல் தொடரில் மூன்று அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் கடந்த ஒரே வீரர் என்கின்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். மேலும் 12 போட்டியில் 600 ரன்கள் கடந்து ஆரஞ்சு தொப்பியையும் தக்க வைத்திருக்கிறார்.

Published by