சூப்பர் மேன் போல் பறந்து கேட்ச்.. களத்தில் ஷாக் ஆகி நின்ற விராட் கோலி

0
2292

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை  தேர்வு செய்தது. ஆடுகளம் தோய்வாக காணப்படுவதால் பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை. இதனால் ரன் சேர்க்க இந்திய வீரர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணியில் ரிஷப் பண்ட், அக்சர்பட்டேல் ஆகியோர் சேர்க்கப்படவில்லை .அதற்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராகவும் அக்சர் பட்ட  பதில் சபாஷ் அகமதும் இடம்பெற்றுள்ளனர்.  தொடக்க வீரராக களம் இறங்கிய தவான், ரோஹித் சர்மா ஜோடி வங்கதேச பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறியது. 17 பந்துகளை எதிர் கொண்ட தவான் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஷகிபுல் ஹசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 15 பந்துகளின் ஒன்பது ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ஷகிபுல் ஹசன் வீசிய பந்தில் கவர் டிரைவ் ஆடினார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த ரிட்டன் தாஸ், சூப்பர் மேன் போல் பாய்ந்து கேட்ச் பிடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத விராட் கோலி களத்திலே ஷாக் ஆகி நின்றார். இதன் மூலம் இந்திய அணி 49 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

டாக்கா ஆடுகளம் ரன் சேர்க்க முதலில் சிரமமாக இருந்தாலும், நேரம் செல்ல செல்ல பேட்டிங்கிறகு சாதகமாக இருக்கும் .இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே ஓரளவுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். வங்கதேச அணி சுழல் பந்துவீச்சை  வைத்து டாக்கா ஆடுகளத்தில் ஈடுபடுகிறது. எனினும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சபாஷ் அஹமது என சுழற்பந்துவீச்சை   மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இதனால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து இந்திய அணி தவறு செய்து விட்டதாக கருதப்படுகிறது.

- Advertisement -