“அந்த ஒரு பந்தை அடிக்க எனக்கு ஏழு டிப்ஸ் கொடுத்தார் விராட் கோலி!” – டி20 உலக கோப்பை பற்றி அஷ்வின்!

0
1342
DK

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் மெல்போன் கிரிக்கெட் கிரவுண்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த போட்டி என்று தாராளமாகக் கூறலாம்!

பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தையும் சூழ்நிலையையும் கொண்டு இருந்த அந்த மைதானத்தில், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை வைத்திருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக, முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து பிறகு விராட் கோலி விளையாடிய விதம் அசாத்தியமானது!

- Advertisement -

அந்தப் போட்டியில் ஹாரிஸ் ரவுப் வீசிய ஒரு பந்தை நேராக விராட் கோலி தூக்கி சிக்ஸருக்கு அடித்தது, இன்று வரையில் பலருக்கு அவரால் எப்படி அப்படி ஒரு பந்தை நேராக அடிக்க முடிந்தது என்று புரியவில்லை.

விராட் கோலியின் மொத்த கிரிக்கெட் வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டால் அவர் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டங்களில் இந்த ஆட்டமும் ஒன்றாக இருக்கும். குறிப்பாக அவர் விளையாடிய டி20 ஆட்டங்களில் இதுதான் அவருடைய சிறந்த ஆட்டம்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள அஷ்வின் ” அந்த டி20 உலகக் கோப்பையில் கடைசிக் கட்டத்தில் நான் பேட்டிங் செய்ய வந்த பொழுது, அந்த ஒரு குறிப்பிட்ட பந்தை நான் விளையாட ஏழு ஆப்ஷன்களை கொடுத்தார். நான் விராட்டின் கண்களைப் பார்க்கும் பொழுது, அவர் வேறொரு கிரகத்தில் இருந்தார். இது விராட்டின் அற்புதமான இன்னிங்ஸ். மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்று!

- Advertisement -

நவாஸ் பந்தை வைடாக வீசியதும் நாம் வெற்றி பெற்றதாக உணர்ந்தேன். கிரிக்கெட் நிறைய செய்திகளை வழங்கும் என்று எனக்குத் தெரியும். நான் அந்த இடத்தில் நேர்மறையை வாங்கி ஆட்டத்தை வென்றேன். நான் ஒவ்வொரு இரவும் தூங்க செல்லும் முன் இந்த ஆட்டம் குறித்து யோசிக்கிறேன். அது விராட் கோலியின் அற்புதமான இன்னிங்ஸ். மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று. அதில் நானும் ஒரு இருந்தேன்.

நான் அந்த மைதானத்திற்குள் நடந்து சென்ற பொழுது என்ன மகத்துவம் ஏற்பட்டது என்று உணர்ந்தேன். இவ்வளவு கூட்டம் இதற்கு முன் எப்பொழுதும் இல்லை. நான் விராட் கோலியைப் பார்த்த பொழுது அவர் வேறொரு கிரகத்தில் இருப்பது போல இருந்தார்!” என்று கூறியிருக்கிறார்!