முதல் இன்னிங்சில் விராட் கோஹ்லிக்கு வீசப்பட்ட அதே பந்து ரிப்பீட் – இம்முறை சர்ச்சையில் சிக்காமல் தப்பித்த 3வது நடுவர்

0
79
Virat Kohli LBW Dismissal

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று இருந்தபோது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் தடுப்பாட்டத்தால் நியூசிலாந்து ஆட்டத்தை டிரா செய்தது. தொடர் போட்டிகளின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் போது முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாட ரகானே, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் மோசமான ஆட்டங்கள் காரணமாக நீக்கப்பட வில்லை என்றும் காயம் காரணமாகவே நீக்கப்பட்டனர் என்றும் அணி தரப்பில் கூறப்பட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் களம் கண்டார். ஆனால் சர்ச்சைக்குரிய மூன்றாம் பெயரின் தீர்ப்பால் அந்த இன்னிங்சில் விராட் கோலி டக் அவுட்டானார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிப்பார் என்று காத்திருக்கும் விராட் ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே கிடைத்தது. இதன் காரணமாக மூன்றாவது அம்பையர் ஆன விரேந்தர் சர்மாவுக்கு சமூக வலைதளங்களில் பெருத்த எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. மயங்க் மற்றும் புஜாரா இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தனர். பின்பு இருவரையும் முதல் இன்னிங்சில் அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்திய அஜாஸ் பட்டேல் மீண்டும் அவுட்டாக்க கேப்டன் கோலி களத்திற்குள் வந்தார். அவர் 6 ரன்கள் எடுத்திருந்த போது அஜாஸ் பட்டேல் பந்து வீச்சில் மீண்டும் அவுட் கொடுக்கப்பட்டார். இந்த முறையும் உடனே அதை ரிவீயு செய்தார் கோலி. அந்த டிக்கெட்டை ஆராய்ந்து பார்த்த 3வது அம்பயர் விரேந்திர சர்மா இந்த முறை மிகவும் கவனமாக பந்து பேட்டில் பட்டதை உறுதி செய்தார். பந்து பேட்டில் பட்டு பின்பு காலில் பட்டதால் விராட் கோலி அவுட் இல்லை என்று முடிவு அளிக்கப்பட்டது.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோரி 11 ரன்களுக்கு ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பெரிய ஸ்கோரை இந்த முறையாவது கோலி எட்டுவாரா என்பதை அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்