வீடியோ – யோ..கோலி என்ன யா பண்ற..! பில்டிங்கில் சாக்லேட் சாப்பிட்ட இந்திய வீரர்கள்

0
1073

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் போல் இல்லாமல் அகமதாபாத் ஆடுகளும் பேட்டிங் இருக்கு சாதகமாக இருந்தது. சுழற் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சித்தும் விக்கெட் கிடைக்கவில்லை.

- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 25 ஓவர்கள் வரை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை 450 ரன்கள் அடிக்க வேண்டிய உத்வேகத்துடன் விளையாடி  வருகிறார்கள்.

இந்திய அணி பொருத்தவரை ஆஸ்திரேலிய 300 ரன்களுக்குள் சுருட்டினால் அது நன்மையை கொடுக்கும். இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய முதல் நாளில் இந்திய வீரர்கள் பில்டிங்கில் கொஞ்சம் தடுமாறினர். குறிப்பாக விக்கெட் கீப்பர் கே எஸ் பரத் கைக்கு வந்த அழகான கேட்சை கோட்டை விட்டார்.

தற்போது இந்திய அணி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் பெரிய இலக்கை குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புஜாரா, கில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பெரிய ரண்களை அடிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள்..

- Advertisement -

இந்த நிலையில் ஆட்டத்தின் 22 ஆவது ஓவரின் போது ஒரு ரூசீகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதில் முகமது சமி பந்து வீசுவதற்கு முன்பு ஸ்லீப்பில் நின்ற விராட் கோலி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து சாக்லேட் எடுத்து சாப்பிட்டு உள்ளார். மேலும் அதனை அருகில் இருந்த ஸ்ரேயாஸ் இடம் வேண்டுமா என்று கேட்டுள்ளார்.

இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கும்  அந்த சாக்லேட்டை கொடுத்துவிட்டு விராட் கோலி பில்டிங் செய்துள்ளார். உடல் தகுதி மீது எப்போதும் அதிக கவனத்துடன் இருக்கும் விராட் கோலி எப்படி சாக்லேட் சாப்பிட்டார்.அதுவும் பில்டிங் நிற்கும்போது எப்படி அவர் இதை செய்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் ஆடுகளத்தில் கிட்டத்தட்ட 38 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் அது உடலுக்கு சக்தியை கொடுக்கும் புரத சாக்லேட்டாக இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வெப்பத்தான் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறையக்கூடாது என்பதால் வீரர்கள் இவ்வாறு சாக்லேட் சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடவருகிறது.