விராட் கோலி எதையும் யாரிடமும் நிரூபிக்க தேவையில்லை – புதிய பிசிசிஐ தலைவர் பரபரப்பு பேச்சு!

0
1029
Viratkohli

இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருக்கும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்திய அணியின் இந்த சுமுகமான நிலைக்கு பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய முதல் போட்டியில் பெற்ற திரில் வெற்றி முக்கியக் காரணமாகும். இதை எளிமையாகச் சொன்னால் இந்திய அணி தற்போது அதிக நம்பிக்கை பெற்றிருப்பதற்குப் பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி முக்கியக் காரணமாக இருக்கிறார்!

- Advertisement -

கடைசி 8 பந்துகளுக்கு 28 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் விராட் கோலி அடித்த மூன்று சிக்ஸர்கள் வெற்றியை இந்திய அணியிடம் கொண்டு வந்தது. அந்த ஆட்டத்தில் கடினமான நேரங்களில் அவர் விளையாடிய ஷாட்கள் அசாதாரணமானவை. அப்படியெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் விளையாட முடியுமா என்று திகைக்க வைத்த ஷாட்கள்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக விராட் கோலி தன்னுடைய வழக்கமான பேட்டிங் ஃபார்மில் இல்லாமல் இருந்து வந்தார். இதைச் சுற்றி நிறைய விவாதங்களும் விமர்சனங்களும் சூழ்ந்து இருந்தது. ஆசியக் கோப்பையில் மீண்டு வந்த விராட் கோலி தன் பழைய பார்மை விட பெரிய தாக்கம் மிகுந்த ஆட்டத்தை ஆட கூடியவராக மாறியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

இந்தப் போட்டி குறித்தும் விராட் கோலியின் பேட்டிங் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வந்திருக்கும் ரோஜர் பின்னி கூறும் பொழுது ” அது எனக்கு ஒரு கனவு போல இருந்தது. மைதானம் முழுக்க பந்தை விராட் கோலி விரட்டி அடித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இது போன்ற போட்டியை நான் பார்த்தது இல்லை. இந்த ஆட்டத்தில் போட்டி பெரும்பாலான நேரங்களில் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாகத்தான் இருந்தது. திடீரென்று ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இப்படிப்பட்ட போட்டிகளைத்தான் மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” விராட் கோலி யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு உலகத்தரமான வீரர். இவரைப் போன்ற வீரர்கள் அழுத்தங்களில் மிகச்சிறப்பாக வெளியே வரக்கூடியவர்கள். அழுத்தம் தான் இவர்களின் சிறப்பானதை வெளியே கொண்டு வருகிறது ” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.