விருது வாங்கிக் கொண்டு விராட்கோலி செய்த காரியம் ; வீடியோ இணைப்பு!

0
8785
Virat kohli

இந்திய அணி சமீபத்தில் ஆசியக் கோப்பை தொடரை இழந்திருந்தாலும், அந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறி இருந்தாலும், இந்திய அணி மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்து இருக்கும்!

ஏனென்றால் ஆசிய கோப்பையில் இந்தியாவின் கடைசி போட்டியில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து, தனது மூன்று ஆண்டுகால சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

விராட் கோலி ஒருவர் மீண்டும் தன் சிறப்பான பேட்டிங் ஃபார்முக்கு வருவது எப்படி ஒரு மொத்த அணிக்கும் நல்ல விஷயம் என்றால், அவர் அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்களின் வேலையை மிக எளிதாக்கி விடுவார். அவர் சீராக விளையாடும் பொழுது, மற்ற பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சீராக விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. யாராவது ஒருவர் அவருடன் சேர்ந்து விளையாடினால் போதும். இதனால் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்காமல் போனாலும் அவர்கள் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் உருவாகாது. அவர்கள் இதனால் பெரிய நெருக்கடி இல்லாமல் அணியில் தொடர்வார்கள். மேலும் மிகச்சுலபமாக பேட்டிங் பார்முக்கு திரும்புவார்கள்.

விராட் கோலி சிலகாலமாக ரன் அடிக்க முடியாமல் இருந்து வந்தபோது புஜாரா ரகானே போன்ற வீரர்கள் அணியை விட்டு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இதே விராட் கோலி தொடர்ந்து சீராக ரன் குவித்து வந்த பொழுது, இவர்கள் ரன் அடிக்காவிட்டாலும் அது வெளியில் தெரியாது. மேலும் அணி வெற்றி பெற்று விடும். இதனால் இவர்களின் மீது விமர்சனமும் வராது. அதனால் இவர்களுக்கு அழுத்தமோ நெருக்கடியோ உருவாகாது. எனவே இவர்கள் சில போட்டிகளில் தவறினாலும் மீண்டும் சுலபமாக வந்து விடுவார்கள்.

இந்தக் காரணங்களால்தான் தற்போது விராட் கோலி பேட்டிங் பார்முக்கு வந்திருப்பது இந்திய அணி நிர்வாகத்தை பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று தொடரை யாருக்கு என்று முடிவு செய்யும் கடைசி மூன்றாவது டி-20 போட்டி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது.

- Advertisement -

இந்தப்போட்டியில் முதலில் பந்து வீச்சாளர்களை தாக்கி விளையாடிய விராட் கோலி, அடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட ஆரம்பித்ததும், அவருக்குத் துணையாக மாறி விளையாட ஆரம்பித்தார். அதேசமயத்தில் ஆட்டத்தில் எங்காவது சூரியகுமார் இடமிருந்து பவுண்டரிகள் வராத பொழுது, உடனே பவுண்டரிகள் அடித்து அழுத்தத்தை குறைத்தார். சூர்யா குமார் யாதவ் வெளியேறியதும், இரண்டு பெரிய சிக்சர்கள் அடித்தார். ஏறக்குறைய கடைசி வரை களத்தில் இருந்து அணியின் வெற்றியை மீண்டும் பழைய மாதிரி முடிவு செய்தார். இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதற்கு அடுத்து நடந்த பரிசளிப்பு நிகழ்வில் விராட் கோலிக்கு ஆற்றல்மிக்க வீரர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்தப் பெயரில் ஒரு விருது வழங்கப்பட்ட காரணத்தால், விராட் கோலி அதைக் குறிப்பிடும் விதமாக நகைச்சுவையாக, விருதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடி வந்து தனது ஆற்றலை வெளிப்படுத்தி காட்டுவதாகச் செய்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியதோடு சிரிக்கவும் வைத்தது. இதற்கான வீடியோ லிங்க் கீழே இருக்கிறது!