தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை புறக்கணிக்க திட்டம் – முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி முடிவு

0
740
Virat Kohli

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியுள்ளது. இன்னமும் சிறிது நாட்களில் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது. ஏற்கனவே இந்திய அணி ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளை அதன் நாடுகளுக்குச் சென்று வீழ்த்தி திறம்பட செயலாற்றி உள்ளது. இன்னமும் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக இருப்பது தென் ஆப்பிரிக்க அணி தான். அதையும் விரைந்து செய்து முடிக்க இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வீழ்த்த முடியாத வலம்வரும் அணியின் இந்திய அணி பேட்டிங்கிற்கு மிகவும் சிக்கலான தென்னாப்பிரிக்க மைதானங்களில் இன்னும் சிறிது நாட்களில் விளையாட காத்திருக்கிறது.

டெஸ்ட் தொடருடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி அங்கு விளையாடுகிறது. ஒருநாள் அணியைப் பொறுத்தவரை சிறிது நாட்களுக்கு முன்பு வரை கோலி தான் கேப்டனாக இருந்தார். ஆனால் தென் ஆப்பிரிக்க அணி தொடருக்கு வீரர்களை அறிவிக்கும் போது இந்திய ஒருநாள் அணிக்கும் ரோகித் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ வெளியிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியை திறம்பட வழிநடத்திய விராட் கோலியை பாராட்டி ஒரு செய்தி கூட தெரிவிக்காமல் பிசிசிஐ இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

- Advertisement -

இதன்பின்பு டி20 மற்றும் ஒருநாள் என இரண்டு தொடர்களுக்கு 2 புதிய கேப்டன்கள் இருப்பதை பிசிசி விரும்பவில்லை என்றும் அதனால்தான் ரோஹித்தை கேப்டனாகவும் ஒரு செய்தி வந்தது. இதை அறிவித்த ஒருநாள் பின்புதான் விராட் கோலியை பாராட்டி இந்திய அணி ட்விட்டரில் சில பதிவுகளை இட்டது. அப்போதே விராட் கோலிக்கு இந்திய அணியின் நடத்தைகளில் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்ற செய்திகளும் வெளிவந்தன.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி விராட் கோலி தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளப் போவதாக தெரியவருகிறது. ரோஹித்தின் தலைமையின்கீழ் விளையாடுவதில் அவருக்கு சிக்கல் இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் பெயர் இருக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்