உங்க வெற்றி அந்த பெரிய விஷயத்துக்கானது.. இத மட்டும் செய்யாமல் விட்றாதீங்க.. நாடே பெருமைப்படுது – விராட் கோலி வாழ்த்து

0
19
Virat

நேற்று பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை வென்ற இந்திய பெண்கள் அணிக்கு விராட் கோலி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

முதல் முறை வரலாறு

இந்திய பெண்கள் அணி இதுவரையில் ஐசிசி கோப்பைகள் எதையும் வென்றது கிடையாது. நிலையில் முதல் முறையாக ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திரத்தை படைத்திருக்கிறது.

இத்துடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் கிடைக்காத வரலாறு இந்திய பெண்கள் அணியின் கேப்டனுக்கு கிடைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் பட்டியலில் கபில்தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்து ஹர்மன்பிரீத் பெயர் இடம் பெறுகிறது.

- Advertisement -

அடுத்த தலைமுறைக்கானது

இந்திய பெண்கள் அணியின் இந்த வெற்றியை இந்தியா முழுக்க கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்த வெற்றி இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் எழுச்சிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது 1983இல் கபில்தேவ் உலகக் கோப்பையை வென்றது எப்படியான தாக்கத்தை இந்தியாவில் உருவாக்கியதோ அதே தாக்கத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இது சாதாரண வெற்றி அல்ல.. கோப்பையை வெல்ல எங்களின் இந்த விஷயம்தான் முக்கிய காரணி – இந்திய கேப்டன் பேட்டி

இதுகுறித்து விராட் கோலி தனது வாழ்த்தில் “வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக மாற, உங்களின் அச்சமற்ற கிரிக்கெட் மற்றும் நம்பிக்கையால், நீங்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் பாராட்டுக்கு தகுதியானவர்கள். இந்த தருணத்தை தவற விடாதீர்கள், முழுமையாக அனுபவியுங்கள். ஹர்மன் அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” ஜெய்ஹிந்த் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -