விராட் கோலியால் எல்லா ஆட்டத்தையும் ஜெயித்து தரமுடியாது – ரோகித் சர்மா கேஎல்.ராகுலை தாக்கிய முன்னாள் இந்திய வீரர்!

0
10490
ICT

நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது!

இந்த ஆட்டத்தில் 31 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்த பொழுது விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி அமைத்து 113 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் குறிப்பாக விராட் கோலியின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவர் ஹாரிஸ் வீசிய 19வது ஓவரில் கடைசி இரு பந்துகளை மிக அற்புதமாக சிக்சருக்கு விளாசி கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை எனும் நிலைக்கு கொண்டுவந்தார். கடைசி ஓவரில் அவர் பங்குக்கு பேட் மூலம் எட்டு ரன்களையும், பைஸ் மூலம் மூன்று ரன்களையும் கொண்டு வந்தார்.

இந்த அபார ஆட்டத்தை மூலமாக மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. இப்படியான போராட்டத்தை கிரிக்கெட்டில் அடிக்கடி காண முடியாது என்பது தான் உண்மை. இந்த ஆட்டத்தில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங் மிகவும் சுமாராக இருந்தது. இதைக் குறிப்பிட்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்து இருந்த மதன்லால் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது ” விராட் கோலியின் இன்னிங்ஸ் ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற ஒரு இன்னிங்சை நான் பார்த்தது இல்லை. ஆனால் விராட் கோலி உங்களை ஒவ்வொரு போட்டியிலும் இப்படி வெல்ல வைக்க முடியாது. இது ஒரு பெரிய தொடர் இந்தத் தொடரில் ஒருவர் மட்டுமே உங்களை வெல்ல வைத்துக் கொண்டே இருக்க முடியாது ” என்றவர்….

- Advertisement -

மேலும் தொடர்ந்து மதன்லால் கூறும்பொழுது ” ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் விராட் கோலியின் பேட்டிங் பாணிக்கு ஏற்றவை. ஒன்று இரண்டு மூன்று என ரண்களை ஓடி ஓடி எடுத்து தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். மேலும் இடையில் பவுண்டரிகள் அடிக்கிறார். மனதளவில் அவர் மிகவும் கடினமாக இருக்கிறார் ” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” ரோகித் சர்மாவும் கேஎல் ராகுல் தங்கள் பொறுப்பை உணர்ந்து மேலே வரவேண்டும். அவர்கள் எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கு உறுதி எடுக்க வேண்டும். இப்படி மாறினால் தான் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒவ்வொரு கதாநாயகர்கள் வருவார்கள் ” என்று கூறியுள்ளார்.