தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஓடிஐயில் அரை சதம் – சச்சின் டெண்டுல்கரின் மதிப்புமிக்க சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி

0
802
Virat Kohli and Sachin Tendulkar

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி நாளான இன்று தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் பவுமா மற்றும் வேன் டெர் டஸ்சென் துணையோடு இறுதியில் 296 ரன்கள் குவித்தது. இன்று அந்த அணியில் அதிகபட்சமாக வேன் டெர் டஸ்சென் 96 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 129 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுப்பக்கம் பவுமா 143 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் குவித்தார்.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே கேப்டன் கேஎல் ராகுல் 12 ரன்களில் மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்பொழுது தவான் மற்றும் விராட் கோலி ஜோடி இணைந்து மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தவான் 79 ரன்களிலும் கோலி 51 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் வெளி மண்ணில் ( அதாவது இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் ) அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். 146 போட்டிகளில் அவர் 5065 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று விராட் கோலியை தன்னுடைய 103வது போட்டியிலேயே சச்சின் டெண்டுல்கரின் மேற்கூறிய சாதனையை முறியடித்துள்ளார். இன்று தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி வெளிமண்ணில் 5066 ரன்களை ( 103 போட்டிகளிலேயே ) குவித்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வெளி மண்ணில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்

5108 : விராட் கோலி (103)*

5065 : சச்சின் டெண்டுல்கர் (146)

4520 : எம்எஸ் தோனி (124)

3998 : ராகுல் டிராவிட் (110)

3468 : சௌரவ் கங்குலி (98)

இந்திய அணிக்காக விராட் கோஹ்லி மேலும் ஓர் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரசிகர்கள் ஏ‍க்கமான 71வது சதத்தை மட்டும் இரண்டு வருடங்களாக அவர் இன்னும் பூர்திசெய்யவில்லை. மீதம் இருக்கும் 2 போட்டியில் ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என்று நம்புவோம்.