முதல் டெஸ்டில் தல தோனியின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி

0
647
Virat Kohli Test

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு கடந்த தசாப்தத்தில் இரண்டு கண்களாக இருந்தவர்கள் தோனியும் கோலியும். இவர்களின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறமையால் இந்திய அணி வென்ற ஆட்டங்கள் மிக அதிகம். தோனியும் திட்டமிடும் மூளையும் விராத் கோலியின் உயர்தர பேட்டிங்கும் அணிக்கு பெரிய அளவிலான வெற்றிகளை அள்ளித் தந்துள்ளது.

பேட்டிங்கிலும் சரி கேப்டன்சியிலும் சரி… முன்னாள் கேப்டன் தோனியின் பல சாதனைகளை தகர்த்து வருகிறார் இந்நாள் கேப்டன் கோலி. தோனியின் தலைமையில் தவறவிட்ட டெஸ்ட் வெற்றிகளை எல்லாம் விராட் தலைமையில் வென்று கொண்டிருக்கிறது இந்திய அணி. தோனி ஓய்வு பெறும் போது மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அணி நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியது விராட் தலைமையில் தான். ஸ்பின்னர்களுக்கே அதிக முக்கியத்துவம் என்று இருந்த தோனியின் பாணியை மாற்றி வேகப்பந்து வீச்சாளர்கள் விஸ்வரூபம் எடுத்தது கோலியின் தலைமையில் தான்.

நியூசிலாந்தில் இந்திய அணியை டெஸ்ட் தொடர் வெல்ல வைத்தார் தோனி. அதே போல அசைக்க முடியாது கோட்டையாக இருந்த ஆஸ்திரேலிய நாட்டுக்கு சென்று அங்கு வென்று வந்தது கோலி தலைமையிலான இந்திய அணி. இப்படி பல சாகசங்களை செய்து முந்தைய கேப்டனுக்கு தான் சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை பல முறை நிரூபித்துள்ளார் கோலி.

தோனியின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி

தோனியின் பல நல்ல சாதனைகளை எல்லாம் முறியடித்த விராட் இப்போது தோனியின் மோசமான சாதனை ஒன்றையும் முறியடித்து விட்டார். தோனி ஒன்பது ஆண்டுகள் கேப்டனாக இருந்து நிகழ்த்திய ஒரு மோசமான சாதனையை கோலி ஏழே ஆண்டுகளில் நிகழ்த்தி விட்டது தான் ஆச்சரியம்.

கோலிக்கு டாஸ் ஜெயிப்பதற்கும் பெரிய இடைவேளை உண்டு. பல நேரங்களில் எதிரணி கேப்டன்கள் தான் டாஸ் வெல்லுவார்கள். கோலி டாஸ் ஜெபித்தாலே அது ஏதோ உலக அதிசயம் போல ஆகிவிட்டது. இதே கதை தான் நேற்றும் நடந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் டாஸை கோலியால் வெல்ல முடியவில்லை.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக டாஸ்களில் தோற்ற இந்தியக் கேப்டன். என்னும் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட். தோனி தனது கேப்டன்சி காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 34 டாஸ்கள் தோற்றது தான் இதுவரை சாதனையாக இருந்தது. இப்போது 35 டாஸ்களில் தோற்று தோனியின் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளார் கோலி.