டி20 போட்டிகளில் உலகின் எந்த வீரரும் செய்யாத சாதனையைச் செய்த கிங் கோலி

0
32
Virat Kohli fifty

டபுள் ஹெட்டர் நாளான இன்று முதல் போட்டியில், 43வது ஆட்டமாக, மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், பாஃப்பின் பெங்களூர் அணிக்கும், ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணிக்குமிடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது.

பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி முதல் இடத்தில் இருக்கிறது. பெங்களூர் அணியில் பிரபுதேசாய் வெளியேபோய் மகிபால் லோம்ரர் உள்ளே வந்திருக்கிறார். குஜராத் அணியில் யாஷ் தயால், அபினவ் மனோகர் வெளியே போய், பிரதிப் சங்வான், சாய் சுதர்சன் உள்ளே வந்திருக்கிறார்கள்.

டாஸ் வென்ற பாஃப் இந்த ஆட்டத்திலும் ஏமாற்ற, தனது பேட்டிங் பார்மின் மீது பலத்த விமர்சனங்கள் இருக்கும் விராட்கோலி சமியின் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அட்டகாசமாக விளாசி அமர்க்களமாக ஆரம்பித்தார். பலரது விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் இன்றைய அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. தொடர்ந்து ஆடிய அவர் 14 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு முதல் அரைசதமடித்தார்.

இந்த அரைசதம் அவரது பேட்டிங் பார்மை மீட்டதோடு புது சாதனையையும் படைத்திருக்கிறது. உலகில் 20/20 போட்டியில் எந்தவொரு வீரரும் இதுவரை ஒரு அணிக்காக 50 அரைசதங்களை அடித்தது இல்லை. இந்தச் சாதனையை இந்த அரைசதத்தின் மூலம் பெங்களூர் அணிக்காகக் கொண்டுவந்திருக்கிறார் விராட்கோலி. பேட்டை தொட்டாலே ஏதாவது ஒரு சாதனைக்குத் தகுதியானவராகவே இன்னும் கிங் கோலி தொடர்கிறார்!