விராட் கோலியிடம் கேட்டுவிட்டு ஒரு கையால் 2 சிக்சர்கள் அடித்தேன் – ரிஷப் பண்ட் உலகக்கோப்பை பழைய நினைவுகள்!

0
277
Rishab Pant

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது 20 உலக கோப்பையில் நாளை மறுநாள் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து மெல்போர்ன் மைதானத்தில் முதல் போட்டியில் மோத இருக்கிறது!

இந்தப் போட்டிக்கான இந்திய அணி எப்படி அமையும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் முன்னாள் வீரர்கள் என்று எல்லோருக்கும் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களாக முகம்மது சமி இல்லை ஹர்சல் படேல் இருவரில் யார் இடம் பெறுவார்கள்? சுழற்பந்து வீச்சாளராக சாகல் இல்லை அஸ்வின் யார் இடம் பெறுவார்கள்? சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அக்சர் படேல் இல்லை தீபக் ஹூடா யார் இடம் பெறுவார்கள்? விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் இல்லை ரிஷப் பண்ட் இருவரில் யார் இடம் பெறுவார்கள்? இப்படி நிறைய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும், முதல் போட்டியில் இடம் பெறப்போகும் வீரர்கள் குறித்து இருக்கிறது.

மேலும் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியில் விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த படு தோல்வியை அடுத்து நியூசிலாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்விக்கும் காரணமாக அமைந்தது

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் வெளியேறி வந்தது. இது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய விமர்சனங்களையும் உருவாக்கியது. இதனையடுத்து இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புது கேப்டன், புது பயிற்சியாளர் புதிய அணுகுமுறை என்று எல்லாம் மாறியது.

தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய அனுபவம் பற்றி தனது கருத்தை கூறியிருக்கிறார்.

இதுபற்றி ரிஷப் பண்ட் கூறும்பொழுது
” நான் அசன் அலி ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்ததை இப்போது நினைவு கூர்கிறேன். நாங்கள் ஆரம்பத்தில் அந்த ஆட்டத்தில் விக்கெட்டை இழந்ததால் ரன் ரேட்டில் பின் தங்கி இருந்தோம். இதனால் நான் விராட் கோலி பேசி ரன் ரேட்டை உயர்த்துவது என்று முடிவு செய்தோம். கொஞ்சம் அதிரடியாக ஆடி ரன் ரேட்டை உயர்த்தினோம். அப்பொழுது அசன் அலியின் ஓவரில் நான் ஒரு கையால் 2 சிக்சர்கள் அடித்தேன் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய ரிஷப் பண்ட்
” பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானது. ஏனெனில் அந்தப் போட்டியை சுற்றி எப்பொழுதும் ஒரு பரபரப்பு இருக்கும். எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இந்த ஆட்டம் குறித்து உணர்ச்சிகள் உண்டு. இது ஒரு வித்தியாசமான உணர்வு. நீங்கள் களத்தில் இறங்கும் பொழுது மக்கள் பெரிய ஆரவாரம் செய்வதை பார்ப்பீர்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. மேலும் தேசிய கீதம் பாடும் பொழுது உண்மையில் எனக்கு மயிர்க்கூச்செரிந்தது ” என்று கூறியிருக்கிறார்!