இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு கேட்டிருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பயிற்சியாளர் கம்பீர் வற்புறுத்தி அழைத்து வந்து தோற்றார். இந்த நிலையில் மீண்டும் ஓய்வில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை அழைக்க முடிவில் இருப்பதாக தெரிகிறது.
இந்திய அணி அடுத்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு சரியான பயிற்சி வேண்டுமென இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடக்கிறது.
இதன் காரணமாக இந்தியாவில் அணிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதில் சுப்மன் கில், கேஎல்.ராகுல், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் ஆகிய எட்டு வீரர்களை இந்த தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
2024 துளிர் டிராபி செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைகிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுவதால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெற மாட்டார்கள். அதற்கு முன்பான இரண்டு சுற்று போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில்தான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் துலிப் டிராபியில் விளையாட வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகிறது. இறுதியாக அவர்கள் இப்படியான உள்நாட்டு தொடரில் விளையாடி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கும். இந்த நிலையில் மீண்டும் இருவரும் உள்நாட்டுப் போட்டியில் களம் இறங்குவதற்கான சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் சுற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில்நடக்கிறது.ஆனால் விமான வசதி இந்த மைதானத்திற்கு கிடையாது. எனவே ஒரு சுற்று போட்டிகளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் யோசிக்கிறது. அப்பொழுதுதான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வசதியாக இருக்கும்.
இதையும் படிங்க : விராட் கோலி மிட்நைட் போட்ட மெசேஜ்.. பார்த்து மிரண்டு போயிட்டேன் – தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேட்டி
மேலும் இந்த தொடரின் முதல் சுற்று செப்டம்பர் மாதத்தில் 5ஆம் தேதியும் இரண்டாவது சுற்று 12ஆம் தேதியும் நடக்கிறது. இந்த இரண்டு சுற்று போட்டியில் ஏதாவது ஒரு சுற்றில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.