3வது ஓடிஐயைக் காண வந்த விராட் கோலியின் மகள் வமிக்காவைப் படம் பிடித்த கேமராமேன்

0
135
Vamika and Anushka Virat Kohli

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த அணிக்கு எதிராக முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா தோல்வி பெற்றுள்ளதால் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது. வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதால் இந்த தொடருக்கு மட்டும் ராகுல் கேப்டனாக இருப்பார் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி ஒருநாள் போட்டி தொடருக்கு கேப்டனாக இருந்தார் ராகுல். ஏற்கனவே 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விராட் விலகியதால் ராகுல் கேப்டனாக என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ராகுல் ஏகப்பட்ட தவறுகள் செய்தார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஆறாவது பந்து வீச்சாளரை பயன்படுத்தாமல் இருந்தது மிகவும் விமர்சிக்கப்பட்டது.

தற்போது 3-வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்து பவுலிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டிகாக் சதம் கடந்து அசத்தியுள்ளார். வான்டர் டுசன் அரைசதம் அடிக்க அந்த அணி 287 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணியின் சார்பாக வேகப்பந்துவீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சற்று சிக்கலான இலக்கைத் துரத்தி வரும் இந்திய அணி தற்போது பேட்டிங் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் விராட் கோலியின் மனைவியும் மகளும் ஆட்டத்தை காண வந்துள்ளனர். அவரது மனைவியான பாலிவுட் நடிகை அனுஷ்கா பல ஆண்டுகாலமாக விராட் கோலியின் உற்ற துணையாக விளங்கி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு இந்த இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வமிகா என்று இருவரும் பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் முகத்தை மீடியாவுக்கு காட்டாமல் தவிர்த்து வந்தனர் இந்த இருவரும். இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு கோலி விளையாட வரும்போது கூட எனது மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிக்கையாளர்களுக்கு கேட்டுக்கொண்டார் கோலி. தனது மகள் ஆட்டத்தைக் காண வந்திருக்கும் இந்த நன்னாளில் விராத் கோலி அதிக ரன்கள் எடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார் என்று காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.