விட்டதை பிடித்த விராட் கோலி; ரோஹித் சர்மாவின் உலக சாதனையைக் கைப்பற்றினார்!

0
106
Virat kohli

துபாய் சர்வதேச மைதானத்தில் 15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் போட்டியாக இந்தியா ஹாங்காங் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது!

இந்த போட்டிக்கான டாஸில் ஹாங்காங் கேப்டன் என்று முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். இந்திய அணியில் பாகிஸ்தான் அணியுடன் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு பின் இந்திய அணிக்குள் வந்த கேஎல் ராகுல் சற்று பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அவருக்கு இந்த போட்டி மீண்டு வருவதற்கான ஒரு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டது. இன்று ரோகித்சர்மா ஓடு களம் கண்ட அவர் முப்பத்தி ஒன்பது பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது தடுமாற்றம் ஆட்டம் இழக்கும் வரை முடியவே இல்லை. இதனால் அதிரடியில் ஈடுபட்ட கேப்டன் ரோகித் சர்மா 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பல காலமாக பேட்டிங் பார்ம் இல்லாமல் இருந்து வரும் விராட் கோலிஇந்த ஆட்டத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். ஏறக்குறைய பவர் பிளே முடிந்து களத்திற்கு வந்த விராட் கோலி, ஆட்டம் மற்றும் ஆடுகளத்தின் சூழலைப் புரிந்து ஒன்று இரண்டு ரன்களாக மெதுவாக சேர்த்து அவசரமில்லாமல் நிதானமாக ஆடினார், பின்பு 25 ரன்களை கடந்த பிறகு தேவைக்குபவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அவரது பேட்டில் இருந்து வந்தது.

அவர் நிற்க நிற்க அவரது ஷாட்களில் கூர்மை அதிகரிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பழைய விராட்கோலி வெளியில் தெரிய ஆரம்பித்தார். பேட்டின் மத்தியில் பந்துகள் பட பட தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அவர் விரும்பிய திசையில் பந்துகளை அவரால் அடிக்க முடிந்தது. நீண்ட நாட்களாக அவரது பேட்டில் இருந்து ஒரு அரைசதம் வராமல் இருந்ததற்கு தற்போது முடிவு கிடைத்திருக்கிறது. 40 பந்துகளில்விராட் கோலி இன்று அரைசதம் அடித்தார்.

- Advertisement -

இன்று விராட் கோலி அடித்த அரைசதம் அவரது 31வது அரை சதமாகும். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த வீரர்களில் ரோகித் சர்மா தற்போது 31 அரைசதத்தோடு முதலிடத்தில் இருக்கிறார். தற்போது கோலி இப்பொழுது அடுத்து இருக்கும் அரை சதத்தின் மூலம் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை சமன் செய்து இருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவத்திலும் ரன் சராசரியை 50க்கு மேல் வைத்திருந்த ஒரே வீரர் விராட் கோலி தான். ஆனால் சமீப மாதங்களில் சரியற்ற அவரது பேட்டிங் பார்மால் டி20 போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 49க்கு குறைந்தது. இன்று அவர் 44 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க, அவரது சர்வதேச டி20 போட்டி ரன் சராசரி மீண்டும் ஐம்பதை தொட்டது. இதன் மூலம் மீண்டும் சர்வதேச மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் சராசரி 50க்கு மேல் வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

ஆசியக் கோப்பை போட்டியில் விராட் கோலி எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பி இருந்த ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் அனைவருக்கும் விராட் கோலியின் இந்த அரை சதம் மிகப்பெரிய நிம்மதியைத் தந்திருக்கிறது. அவருக்கும் இந்த அரைசதம் ஒரு பெரிய விடுதலையைக் கொடுத்து இருக்கும் என்று நம்பலாம். தற்போது ஆசிய கோப்பையில் அவர்தான் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். மேலும் ஆசிய கோப்பையில் அதிக சராசரியை வைத்திருக்கும் பேட்ஸ்மேன் ஆகவும் அவர்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!