“அவர் ஸ்டைல் ஆட்டம் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது” – விராட் கோலியின் ஆட்டம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் !

0
2069

பதினாறாவது ஐபிஎல் தொடரின் ஐம்பதாவது போட்டி டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது .

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது . கேப்டன் பாப் சிறப்பாக ஆடி 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார் . விராட் கோலி 46 பந்துகளில் 55 ரன்கள் லம்ரோர் 29 பந்துகளில் 54 ரன்கள் எடுக்க பெங்களூர் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய டெல்லி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது . டெல்லி அணியின் சால்ட் அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . நேற்றைய போட்டியில் அவர் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார் .

இந்தத் தோல்வியின் மூலம் பெங்களூர் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு மீதி இருக்கின்ற போட்டிகள் அனைத்தையும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது . இந்தத் தொடரின் துவக்கத்திலேயே விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய ஒரு சர்ச்சை எழுந்தது நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல் விராட் கோலி மெதுவாக ஆடுவதாக கருத்து தெரிவித்திருந்தார் . தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் .

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” ஆட்டத்தின் துவக்கத்தில் ஒன்று மட்டும் இரண்டு ரன்கள் என சேர்த்து விட்டு இறுதியில் வேகமாக ஆடி ரண்களை எடுப்பது விராட் கோலியின் ஸ்டைல் . டி20 கிரிக்கெட்டில் அது ஒரு டெம்ப்ளேட் ஆகவே இருந்து வந்தது விராட் கோலியின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தாலும் . அவரது ஆட்டத்தின் துவக்கத்தில் நூறு அல்லது 120 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடி வருவார் . தற்போது இந்த டெம்ப்லேட் காலாவதியாகிவிட்டதாகவே நினைக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் .

- Advertisement -

மேலும் இதுபற்றி பேசி இருக்கும் அவர் ” விராட் கோலி இறுதிவரை ஒரு முனையில் நின்று ஆடுவது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு அவரைச் சுற்றி களமிறங்கும் மற்ற அதிரடி ஆட்டக்காரர்களுக்கு துணையாக ஒரு முனையில் நின்று ஆடி வருகிறார் . தற்போது இம்பேக்ட் பிளேயர் போன்ற விதிகள் கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் ஆட்டம் வேகமாக மாறிவிட்டது . விராட் கோலி ஸ்டைல் டி20 கிரிக்கெட் தற்போது எடுபடாது அது பழமையாகி விட்டது” என தெரிவித்திருக்கிறார் .