பாகிஸ்தான் வீரர்களை பார்த்ததும் ஓடிச்சென்று விராட் கோலி செய்த செயல் – பாராட்டி வரும் இன்டர்நெட் உலகம்!! வீடியோ இதோ..

0
322

துபாயில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்ததும் விராட் கோலி அவர்களிடம் சென்று செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று தந்திருக்கிறது.

இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை தொடரின் 15 வது சீசன், கடைசி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. ஐந்து அணிகள் ஏற்கனவே துபாய் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குவாலிபயர் மூலம் மீதம் இருக்கும் ஒரு அணி தேர்வு செய்யப்பட்டு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும்.

- Advertisement -

ஆகஸ்ட் 24ஆம் தேதி துபாய் சென்ற இந்திய அணி வீரர்கள் நள்ளிரவு வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். பாகிஸ்தான் வீரர்களும் இந்திய அணி வந்திறங்கிய அதே நாளில் துபாய் வந்தனர். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் அதே மைதானத்தில் தான் பாகிஸ்தான் வீரர்களும் பயிற்சிக்காக வந்தனர். இந்த மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களில் சிலரை கண்டதும் உடனடியாக அவர்களிடம் சென்று கைகுலுக்கி ஓரிரு வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். அத்துடன் ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கான் உட்பட சிலரும் இந்த மைதானத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடமும் விராட் கோலி நட்புறவு பாராட்டினார். தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்து வரும் ஜாம்பவான் முகமது யூசுப் விராட் கோலியை பார்த்ததும் பேசினார். அவரிடமும் விராட் கோலி கைகுலுக்கி பேசினார்.

இரு அணிகளுக்கும் இடையேயான இருதரப்பு தொடர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படவில்லை. இருப்பினும் அவ்வப்போது இது போன்ற மிகப்பெரிய தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன. ஆனாலும் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியின் பரபரப்பு தற்போது வரை குறையவில்லை. கடந்த முறை இரு அணிகளும் டி20 உலக கோப்பை தொடரின் போது மோதின. அப்போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை வீழ்த்தியது. குறிப்பாக அந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது. அதன் பிறகு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.

மைதானத்திற்குள் இரு அணி வீரர்களுக்கும் இடையே எத்தகைய கோபம், ஆக்ரோஷம் மற்றும் போட்டி உணர்வு இருந்தாலும், மைதானத்திற்கு வெளியே அவர்கள் எதையும் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நட்புறவில் இருப்பதை காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இது ஒரு பாடமாகவும் இரு அணி ரசிகர்களுக்கும் இருக்கும். பாகிஸ்தான் வீரர்கள் உடன் நட்புறவு பாராட்டிய விராட் கோலியின் இந்த நெகழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்று இருக்கிறது.

- Advertisement -