மீண்டும் விராட் கோலியால்தான் இதை உருவாக்க முடியும்! – முன்னாள் வீரர் பரபரப்பு பேட்டி!

0
1657
Viratkohli

இங்கிலாந்து அணியை போன்று அதிரடியான ஆட்ட யுக்தியை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியால் நடைமுறைப்படுத்த முடியும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார் .

நேற்று நடந்த முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான ராவல் பிண்டி ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதனை அடுத்து இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் பின்பற்றி வரும் பாஸ் பால் அணுகுமுறை கிரிக்கெட் ரசிகர்களிடமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

- Advertisement -

இங்கிலாந்தின் பிரபல வர்ணனையாளரான டேவிட் லாய்ட் ஆங்கில நாளிதழான டெய்லி மெயில்க்கு எழுதியுள்ள கட்டுரையில் “இங்கிலாந்து அணியின் இந்த அணுகுமுறை கிரிக்கெட் உலகுக்கு அவ்வளவு புதிதான ஒன்று அல்ல இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில இதே போன்றதொரு அணுகுமுறையை 80களில் மேற்கிந்திய தீவுகளும் 90களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா அணியும் பின்பற்றி வந்தன” .

“தற்போது உள்ள அணிகளில் இந்த ஆட்ட அணுகுமுறையை இந்திய அணியால் பின்பற்ற இயலும் ஆனால் சாத்தியப்பட வேண்டும் என்றால் இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்க வேண்டும் . ஏனெனில் பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே ஆட்டத்தை அணுகுகின்றனர் ஆனால் விராட் கோலி தான் போட்டியின் தாக்கம் மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட கேப்டனாக இருந்திருக்கிறார் . அதனால் விராட் கோலி கேப்டனாக இருந்தால் நிச்சயமாக இந்திய அணி இந்த பாஸ் பால் அணுகுமுறையை கடைப்பிடித்திருக்கும்” என்று நான் நம்புகிறேன் என்று அவர் எழுதி இருக்கிறார் .

டேவிட் லாய்ட் கூறியது போல விராட் கோலி இந்திய அணியின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டனாக இருந்திருக்கிறார் . 2014 முதல் 2022 ஜனவரி வரை இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி 40 வெற்றிகளை பெற்றிருக்கிறார் இது இந்திய கேப்டன்களில் அதிகபட்ச வெற்றியாகும் . மேலும் விராட் கோலியின் தலைமையில் தான் இந்திய அணி அதிகமாக வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்தது . ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை வென்றதும் அவரது தலைமையில் தான் . அவரது தலைமையில் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததும் குறிப்பிடப்பட்டது . இந்த வருடத்தின் துவக்கத்தில் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -