நம்ம கே எல் ராகுலா இது, கல்யாணத்தில் நாக்கு முக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கே எல் ராகுல் – வீடியோ இணைப்பு

0
41

கே எல் ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடினார். லக்னோ அணியை தலைமை தாங்கி மிகச் சிறப்பாக வழிநடத்தி அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். ப்ளே ஆப் சுற்றுக்கு சென்ற அந்த அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் கேஎல் ராகுல் தலைமையில் லக்னோ அணி மிக சிறப்பாக விளையாடியது என்றுதான் சொல்ல வேண்டும்.

கே எல் ராகுலை பாராட்டியுள்ள ரவிசாஸ்திரி

கடந்த இரண்டு மூன்று வருடங்களில் நீங்கள் எடுத்துப் பார்த்தால் டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரையில் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடி வரும் ஒரு சிறந்த வீரர் கே எல் ராகுல். இந்த பார்மட்டில் அவரை அடித்துக் கொள்ள முடியாது. இந்திய அணியை டி20 போட்டிகளில் இதற்கு முன்னர் தலைமை தாங்கியிருக்கிறார். நிச்சயமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரிலும் இவர் இந்திய அணியை சிறப்பாக தலைமை தாங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கல்யாணத்தில் நாக்கு முக்கா தமிழ் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய கே எல் ராகுல்

ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து பல்வேறு வீரர்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துக் கொண்டு வருகின்றனர். ஒரு சில வீரர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்தது பிளாக் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கே எல் ராகுல் சமீபத்தில் கல்யாணத்தில் காணப்பட்டு இருக்கிறார். அங்கே அவர் உற்சாகமாக தமிழ் திரைப்பட பாடல் நாக்குமுக்கா பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக அமைதியாக இருக்கும் கேஎல் ராகுல் இவ்வாறு உற்சாகமாக நடனம் ஆடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற ஜூன் 9 முதல் தொடங்குகிறது. கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.