நாயகன் மீண்டும் வரான் வின்டேஜ் சச்சின் ; 20 பந்துகள் 40 ரன்கள் ; வீடியோ இணைப்பு!

0
4701
Sachin

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய உலக கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் பங்குபெறும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியா இலங்கை இங்கிலாந்து பாகிஸ்தான் நியூசிலாந்து ஆஸ்திரேலியா பங்களாதேஷ் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது.

இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய முன்னாள் வீரர்கள் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடர் இது இரண்டாவது சீசன் ஆகும். இந்த சீசன் இந்தியாவில் நடைபெறுவதால் இதில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் பங்கேற்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த தொடருக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சச்சின் இதற்காக நல்ல முறையில் பயிற்சி செய்து ஒரு சர்வதேச போட்டிக்கு தயாராவதை போல தயாராகி வந்தார். களத்தில் அவரது பேட்டிங்கை பார்ப்பதற்கு 2000ல் பார்த்த பழைய சச்சினை அப்படியே பார்ப்பது போலிருந்தது. அவருடைய முத்திரை ஷாட்கள் மீண்டும் அப்படியே திரும்பி வந்திருக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ் அணியுடனான ஆட்டத்தில் சச்சின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். ஆனால் அந்த முழு போட்டியில் நடக்காததால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இன்று அதற்கு பரிகாரம் செய்யும் விதமாக இங்கிலாந்து லெஜென்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 20 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடக்கம். இதற்கான வீடியோ லிங்க் கீழே இருக்கிறது.

- Advertisement -

சச்சின் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இருந்தார் இருக்கிறார் என்பதற்கான காரணம், அவர் தொடருக்கு முன்பாக எவ்வளவு அர்ப்பணிப்போடு பயிற்சியில் ஈடுபட்டு, போட்டியில் எவ்வளவு அர்ப்பணிப்போடு விளையாடுகிறார் என்பதில்தான் இருக்கிறது. அவர் இப்பொழுது விளையாடிக்கொண்டிருக்கும் ஆட்டம் கூட இளம் வீரர்களுக்கு மட்டுமல்லாது, தற்போது ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கும் ஒரு பாடமாகும்!