வீடியோ.. கிரிக்கெட் வரலாற்றில் மோசமான ரன் அவுட்.. ஆதில் ரசித்தின் அலட்சியம்.. மெண்டிஸ் பிரில்லியன்ஸ்!

0
1075
England

இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூரு மைதானத்தில் உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் இரண்டு அணியுமே வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்புகள் நீடிக்க முடியும் என்கின்ற நிலைமை இருந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் 3 போட்டிகளை தோற்று, ஒரு போட்டியை வென்று, இரண்டு புள்ளிகள் எடுத்து, புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ரன் ரேட்டை சிறிய பெங்களூரு மைதானத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் ஒவ்வொரு முறையும் மாறி மாறி தவறான முடிவுகளை மட்டுமே எடுப்பதற்கான தண்டனையை இன்றும் இங்கிலாந்து அணி அனுபவித்தது. வெயில் அதிகமான மும்பை மைதானத்தில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தவறு செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் 33.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெறும் 156 ரன்கள் மட்டும் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகி, மீண்டும் அவர்களது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இது போதாது என்று அந்த அணியின் ஆதில் ரஷீத் பேட்டிங் செய்ய வந்த பொழுது, மிகவும் மந்தமான அலட்சியமான ஒரு செயல்பாட்டை காட்டி ரன் அவுட் ஆகியது இன்னும் இங்கிலாந்து ரசிகர்களை வெறுப்பேற்றியிருக்கிறது.

பேட்டிங் முனையில் இருந்த டேவிட் வில்லிக்கு தீக்ஷனா வைடாக ஒரு பந்தை வீசினார். அவர் பந்தை ஆட முடியாமல் கீப்பருக்கு விட்டுவிட, அதைப் பிடித்த மெண்டிஸ் மிகவும் புத்திசாலித்தனமாக, ஆதில் ரஷீத் பந்துவீச்சாளர் முனையில் கிரீசுக்கு வெளியே இருந்ததை பார்த்து, ஸ்டெம்பை நோக்கி எறிந்தார்.

எறியப்பட்ட பந்து ஸ்டெம்பை துல்லியமாகத் தாக்க, திடீரென்று நடந்ததை உணர முடியாத ஆதில் ரஷீத் கிரீசுக்கு திரும்ப போதுமான நேரம் கிடைக்கவில்லை. இதனால் அவர் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.

அணி மிக மோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, எப்படியாவது 200 ரன்களை எட்ட முடிந்தால் கூட போதும் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது, ஆதில் ரஷீத் பந்துவீச்சாளர் முனையில், அதுவும் விக்கெட் கீப்பர் கையால் ரன் அவுட் ஆனது, கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான ரன் அவுட் ஆக பார்க்கப்படுகிறது!