வீடியோ.. ஏ எப்புட்றா.. பெயில்சை மாத்தி வைத்து லபுசேன் விக்கெட்டை தூக்கிய பிராட்!

0
983
Broad

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான ஆசஸ் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளையும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கிறது. இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக சமனில் முடிந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து 21 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தில் ஆசஸ் டெஸ்ட் தொடரை வெல்ல ஒரு நல்ல வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு ஐந்தாவது டெஸ்ட் கிடைத்திருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து வென்றால் டெஸ்ட் தொடரை சமன் செய்யும்.

இந்த நிலையில் கென்னிங்டன் ஓவலில் தொடங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஹாரி ப்ரூக்85 ரன்கள் எடுத்துக் கொடுக்க முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு 283 ரன்கள் கிடைத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி மிகவும் மந்தமான முறையில் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் 24 ரன்கள் எடுத்து வெளியேற, அதற்கு அடுத்து பேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் வந்த லபுசேன் ரன்னே அடிக்காமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை கடுமையாக வெறுப்பேற்றினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அவர் காட்டிய பொறுமை மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கே சலிப்பை உண்டாக்கும் விதத்தில் இருந்தது. ஒட்டுமொத்தமாக 82 பந்துகள் களத்தில் நின்ற லபுசேன் எடுத்த ரன்கள் 9 மட்டும்தான்.

இப்படி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அவர் வெறுப்பேற்றிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஸ்டெம்ப் பக்கம் வந்த ஸ்டூவர்ட் பிராட் இரண்டு பெயில்ஸ்களையும் எடுத்து மாற்றி வைத்துவிட்டு நகர்ந்தார்.

இதற்கு அடுத்து மார்க் வுட் வீசிய பந்தில் ஜோ ரூட் அபாரமான கேட்ச் பிடிக்க மார்னஸ் லபுசேன் பரிதாபமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். ஸ்டூவர்ட் பிராட் பெயில்சை மாற்றி வைக்கும் பொழுது சிரித்துக் கொண்டிருந்த லபுசேன், ஆட்டம் இழந்ததும் அது குறித்து நடுவரிடம் புகார் சொல்லிவிட்டு சென்றது நகைச்சுவையான ஒன்றாக இருந்தது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இங்கிலாந்த அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்திருக்க, ஆஸ்திரேலியா அணி நேற்று ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தனது கடைசி விக்கெட்டை இழந்து 103.1 ஓவரில் 295 ரன்கள் சேர்த்து இருக்கிறது. மீதம் மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் முடிவு தெரிவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.