வீடியோ… நேரடியாகவே களத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி – கம்பீர்; சமாதானம் செய்ய குவிந்த வீரர்கள்!

0
4393
Virat kothi

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது!

டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு, பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி 31, கேப்டன் பாப் 44 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே வந்தது.

- Advertisement -

ஆட்டத்தின் முதல் பகுதியில் பீல்டிங் செய்யும் பொழுது காயம் அடைந்த கேப்டன் கே எல் ராகுல் ஆட்டத்தை துவங்க வர முடியவில்லை.

இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியால் ஒரு பந்து மீதம் இருக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதை அடுத்து பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவில் லக்னோ அணியிடம் அடைந்திருந்த தோல்விக்கு பழித் தீர்த்துக்கொண்டு ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது.

- Advertisement -

இந்தப் போட்டி முடிந்து வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் சம்பிரதாய முறையில் கைக்குலுக்கி கொள்ளும் நிகழ்வில் விராட் கோலி மற்றும் கம்பீருக்கு ஏதோ மோதல் நடந்தது. விராட் கோலி கோபமாக ஏதோ கூறி பேசினார். பின்பு வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் அவரைச் சமாதானப்படுத்தி அந்த இடத்திலிருந்து அனுப்பி வைத்தார்கள். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பெங்களூரில் வந்து லக்னோ அணி விளையாடி பரபரப்பான ஆட்டத்தில் வென்ற பொழுது கம்பீர் மைதானத்திலிருந்து பெங்களூர் ரசிகர்களைப் பார்த்து வாய் மேல் விரல் வைத்து அமைதியாக இருக்கணும் என்று சைகை செய்து இருந்தார்.

மேலும் விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மோதலும் நடந்திருக்கிறது. இது இரண்டும் சேர்ந்து தற்பொழுது நேரடியாகவே மைதானத்தில் வெடித்து விட்டது.