வீடியோ.. மிரட்டிய மிராக்கிள் கேட்ச்.. உலக கோப்பையின் மிக சிறந்த கேட்ச்சை பிடித்த ரஹிம்!

0
659
Rahim

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று டெல்லி மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் பெரேரா மற்றும் தனஞ்செய டி சி ல்வா இருவரும் மீண்டும் திரும்பவந்திருக்கிறார்கள்.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் ஏழு போட்டிகளை விளையாடி இருக்க, இலங்கை இரண்டு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் பங்களாதேஷ் அணிக்கு மேல் இருக்கிறது.

பங்களாதேஷ் அணி தன்னுடைய ஏழு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட்டும் இலங்கை அணி விட குறைவாக இருக்கிறது.

புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் வரும் அணிகளே 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியும். எனவே இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் சோரிஃபுல் பந்துவீச்சில் குசால் பெரேரா அடித்த பந்தை விக்கெட் கீப்பர் ரஹீம் அபாரமான முறையில் கேட்ச் பிடித்து அசத்தியிருக்கிறார்.

ஓரளவுக்கு மேலே வெளியே வீசப்பட்ட பந்தை குசால் பெரேரா ஸ்லைஸ் செய்யப் போக, பந்து எட்ஜ் எடுத்து முதல் ஸ்லிப்பிலிருந்து பீல்டரை நோக்கி சென்றது. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் ரஹீம் அந்த இடம் வரை பாய்ந்து அபாரமான முறையில் பந்தை பிடித்து ஆச்சரியப்படுத்தினார்.

இந்த கேட்சில் சிறப்பு என்னவென்றால், ரஹீம் உயரம் குறைவானவர் எனவே பந்தை பிடிப்பதற்கான அவருடைய ரீச் குறைவாக இருக்கும். மேலும் ரஹீம் வலது கை விக்கெட் கீப்பர். பந்து அவருக்கு எதிர்த்திசையில் இடது பக்கம் சென்றது. அவருக்கு எதிராக இந்த விஷயங்கள் இருந்த பொழுதும், அவர் இந்த கேட்ச்சை அபாரமாக பிடித்து இருக்கிறார். எனவே இந்த உலகக் கோப்பையில் இதுவே சிறந்த கேட்ச்சாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது.