வீடியோ ; கண்கலங்கிய விராட் கோலி ; ராஜா ராஜாதான் என்று நிரூபித்தார்!

0
4523
Viratkohli

கடந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக, மூன்று ஆண்டுகள் தவம் இருந்த விராட் கோலி சதம் வந்தது!

அந்த நேரத்தில் பல முன்னாள் வீரர்கள் சொன்ன ஒரே வார்த்தை ” இனி நாம் பழைய விராட் கோலியை பார்க்கப்போகிறோம் ; இனி இந்திய அணியை அவர் பார்த்துக் கொள்வார் ” என்றுதான்!

அந்தக் கணிப்புகள் மிகச்சரியாக இன்று எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிரூபணம் ஆகியிருக்கிறது. உயர் அழுத்த போட்டியெல்லாம் தனக்கு ஒன்றுமே கிடையாது என்று கிங் கோலி மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விரைவில் 4 விக்கெட்டுகளை இழக்க, ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து 100 ரன் பார்ட்னர்ஷிப் கொண்டுவந்து, பிறகு அவரை ஒரு முனையில் வைத்துக்கொண்டு ஓவருக்கு தேவைப்படும் ரன்னை கணக்கிட்டு பாகிஸ்தான் அணியை தோல்வியை நோக்கி அழைத்துச் சென்றார் விராட் கோலி.

சேசிங் மாஸ்டர் என்பதன் அர்த்தம் என்னவென்று இன்று கிரிக்கெட் பார்த்த பல கிரிக்கெட் வீரர்களுக்கு புரிந்திருக்கும். உலகம் கண்டிராத எக்கச்சக்க திருப்பங்கள் நிறைந்த இன்றைய போட்டியில் இறுதிவரை களத்தில் நின்ற விராட்கோலி 53 பந்துகளில் 82 ரன்களை 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் எடுத்து அசத்தினார்.

கடந்த காலங்களில் ரன் வராமல் அவர் கஷ்டப்பட்ட பொழுது, அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யூகிக்க முடியாது. இன்றைய போட்டியில் பழைய ராஜாவாக திரும்பி வந்த விராட் கோலி அணியை வெற்றி பெற வைத்ததும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கி விட்டார்.

இப்படிப்பட்ட ஒரு விராட் கோலியை நாம் மைதானத்தில் பார்த்ததே கிடையாது. இன்று தான் யார் என்று உலகத்திற்கு மீண்டும் நிரூபித்த பிறகு அந்த நிம்மதி உணர்வு அவர் கண்களில் கண்ணீரை கொண்டு வந்திருக்கிறது. இதன் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!