வீடியோ; இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தல தோனி!

0
2416
Dhoni

இந்திய அணி புதிய ஆண்டின் துவக்க கிரிக்கெட்டை, ஆண்டின் முதல் மாதத்தில் உள்நாட்டில் வைத்து இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் வெற்றிகரமாக விளையாடி வருகிறது!

முதலில் இலங்கை அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஒரு ஆட்டத்தை தோற்று இரண்டு ஆட்டங்களை வென்று கைப்பற்றி இருந்தது. அதே சமயத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்து மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து அணி உடன் தற்போது உள்நாட்டில் மோதி வருகிறது. நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது!

இதற்கடுத்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து அணி உடன் நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள ஜே எஸ் சி ஏ ஜார்க்கண்ட் சர்வதேச கிரிக்கெட் மைதான அரங்கில் விளையாடுகிறது!

ஜார்க்கண்ட் ராஞ்சி நகர் கிரிக்கெட் மைதானம் இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் ஆன முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரில் அமைந்துள்ள மைதானம் ஆகும். இந்த நிலையில் அங்கு சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மகேந்திர சிங் தோனி அவர்களின் வீட்டிற்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் வெளியில் பெரிதாய் தலை காட்டாத தல தோனி தன் சொந்த ஊருக்கு வந்துள்ள இந்திய அணியினரை ஆச்சரியப்படுத்தும் விதமாக மைதானத்திற்குச் சென்று அங்கு பயிற்சியில் இருந்த இந்திய வீரர்களைச் சந்தித்து உரையாடல் நிகழ்த்தினார். மேலும் தனிப்பட்ட முறையில் இளம் வீரரான இசான் கிஷான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் கலந்துரையாடினார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!