வீடியோ; தடுமாறும் கே.எல்.ராகுல்; பயிற்சி அளிக்கும் விராட் கோலி!

0
609
Viratkohli

கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனித்துவமான பேட்டிங் திறமை கொண்டவர். இவரது பேட்டிங் திறமை லாரா போன்ற பல ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை கவர்ந்த ஒன்று!

ஆனால் முக்கிய போட்டிகள் என்று வரும் பொழுது இவர் திடீரென்று பதட்டம் அடைந்து தனது திறமையை தொலைத்து நெருக்கடிக்கு உள்ளாகி ஆட்டமிழந்து விடுகிறார்.

- Advertisement -

இவர் இப்படி திடீரென்று பதட்டம் அடைந்து நம்பிக்கையற்று விளையாடி ஆட்டமிழப்பதால் எதிர்முனையில் விளையாடும் பேட்ஸ்மேனுக்கும் நெருக்கடி உண்டாகி அவரும் ரன் அடிக்கப் போய் ஆட்டம் இழக்கிறார்.

கடந்த டி20 உலகக் கோப்பை முன்பாக நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், அந்த உலகக் கோப்பை பிரதான சுற்றில் மிக மோசமாக விளையாடினார். அதேபோல் தற்போதைய டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் பிரதான சுற்று மூன்று ஆட்டத்திலும் மோசமாக விளையாடி இருக்கிறார்.

இவர் இப்படி தனது திறமைக்கு நியாயம் செய்யாமல் தேவையற்று அழுத்தத்திற்கு உள்ளாகி தானும் நெருக்கடிக்கு போய், எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனையும் நெருக்கடியில் தள்ளி அணியையும் நெருக்கடிக்குத் தள்ளுவது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு இன்று இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த பொழுது, கேஎல்.ராகுலுக்கு விராட் கோலி வலைப் பயிற்சியின் போது சில அறிவுரைகளை வழங்கி, அவர் விளையாடுவதை சரி செய்து இருக்கிறார். அந்தக் காணொளி சமீபத்தில் வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அந்த பொறுப்புக்குரிய வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி அர்ப்பணிப்போடு அணியில் பங்களிப்பு செய்வதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!