வீடியோ.. ஸ்லோ பேட்டிங்கா? 59 பந்து, 8 ஃபோர், 104 ரன்.. பாபர் ஆசமின் ஒர்க் அவுட் ஆகும் மாஸ்டர் பிளான்!

0
216
Babar azam

தற்பொழுது இலங்கையில் லங்கா பிரிமியர் டி20 கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தற்போது தொடர்ந்து நான்காவது சீசனாக நடைபெறுகிறது!

இந்தத் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆஸம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ஒப்பந்தமாக, இலங்கைத் தொடருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து பாபர் ஆசமின் ஸ்ட்ரைக் ரேட் பலராலும் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல் லங்கா பிரீமியர் லீக்கில் அவரது ஆரம்ப இரண்டு ஆட்டங்கள் இருந்தது.

இந்த நிலையில் இன்று காலே டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற கொழும்பு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

காலே அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் லஷீத் குருஸ்புல்லே 36, ஷேவான் டேனியல் 49 ரன்கள் என முதல் விக்கெட்டுக்கு அதிரடியான நல்ல துவக்கம் தந்தார்கள். அடுத்து வந்த பானுக ராஜபக்சே 30 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். டிம் ஷெப்பர்ட் 35 நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 54 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் காலே அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன் சேர்த்தது. லக்ஷன் சண்டகன் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் மட்டும் விட்டு தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு பதும் நிசாங்கா மற்றும் பாபர் ஆஸம் இருவரும் துவக்க வீரர்களாக களம் வந்தார்கள். இருவருமே தங்களது அணிக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை அதிரடியாக ஏற்படுத்தித் தந்தார்கள்.

பதும் நிசாங்கா 40 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 12.3 ஓவரில் 111 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த நுவன் பெர்னாடோ 8 ரன்னில் வெளியேறினார்.

ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 59 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கி ஆட்டம் இழந்தார். ஆனாலும் 19.5 ஓவர் வரை ஆட்டம் தொடர ஒரு வழியாக கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி காலே டைட்டன்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 176 ஸ்ட்ரைக்ரேட்டில் சதம் அடித்து, தன் பேட்டிங் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பாபர் ஆஸம் பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் இந்தத் தொடரில் விளையாடுவதற்கான காரணம் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை என்று பாபர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது!