வீடியோ; ஏழு வருடங்களுக்கு முன்பு வாட்சனுக்கு ; இன்று கேமரூன் கிரீனுக்கு – அசத்தல் கேட்ச் பிடித்த ஜடேஜா!

0
279
Jadeja

பதினாறாவது ஐபிஎல் சீசனின் மிக முக்கிய போட்டியான சென்னை மும்பை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடி வரும் போட்டி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் 1000வது போட்டியாகும்..

இந்தப் போட்டியில் முதலில் டாசை தோற்று பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து இஷான் கிஷான் 32 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் தோனியின் அபார ரிவ்யூவால் சான்ட்னர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். விக்கெட்டுகள் போனாலும் இன்னொரு பக்கம் கேமரூன் கிரீன் இருந்தது நம்பிக்கையாக இருந்தது.

இன்று மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா அவருக்கு நேரான ஒரு பந்தை வீச, அதை கேமரூன் கிரீன் பலம் கொண்டு நேராக வேகமாக அடிக்க, பந்து ஜடேஜாவை தாண்டி கொண்டு அம்பயரின் தலையை பதம் பார்க்க விரைந்தது.

இந்த நேரத்தில் அனிச்சை செயல் போல உடனே செயல்பட்ட ஜடேஜா, பந்துக்கு கைகளை கொடுத்து, அபாரமாக தடுத்து, அதோடு அதை கேட்ச் ஆகவும் எடுத்து கேமரூன் கிரினை வெளியேற்றினார். இவ்வளவு துரிதமான நேரத்தில் ஒரு கேட்சை ஒரு பந்துவீச்சாளரே எடுப்பது என்பது நினைத்தே பார்க்க முடியாதது. ஆனால் அதை மிகச் சுலபமாக இரண்டாவது முறையாக சாதித்திருக்கிறார் ஜடேஜா. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -

இதற்கு முன்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கேஎஃப்சி டி20 தொடரில் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷேன் வாட்சனுக்கு பந்து வீசி, இதே போல அவர் பலம் கொண்டு அடிக்க, அதை மிகத் துரிதமாக கேட்ச் பிடித்து அசத்தி இருந்தார் ஜடேஜா. ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு அதைச் செய்திருக்கிறார்.

இன்று மிக அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 157 ரன்கள் தற்பொழுது எடுத்திருக்கிறது.