வீடியோ.. பிரித்வி ஷா பாவம்.. இங்கிலாந்து போயும் விடாத சனி.. வினோதமாக அவுட் ஆன பரிதாபம்!

0
663
Prithivi

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சச்சினும் சேவாக்கும் சேர்ந்த கலவை என்று பல முன்னாள் வீரர்களால் ஆருடம் சொல்லப்பட்ட இளம் வீரர் மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா!

ரஞ்சி மற்றும் துலீப் டிராபி இரண்டிலும் அறிமுகப் போட்டியில் சச்சின் போலவே இவரும் சதம் அடித்து இருந்தார். ஆனால் சச்சின் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சதம் அடித்தது கிடையாது. ஆனால் ப்ரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச அறிமுகத்தில் மூன்று முறை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

கண் மற்றும் கையசைவுகளைக் கொண்டு பெரிதாக காலை நகர்த்தாமல் திறமையாக விளையாடும் திறன் படைத்த இவர், பேட்டை உயரமாக தூக்கிப் பிடித்து விளையாடும் பழக்கம் கொண்டவர். இதன் காரணமாக உள்ளே வரும் பந்துக்கு இயல்பாகவே இவரிடம் தடுமாற்றம் இருந்தது. மேலும் வேகமாக வீசப்படும் ஷார்ட் பாலில் இவருக்கு பலவீனம் இருந்தது.

இந்த இரண்டும் சேர்ந்து இவருக்கு இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் மிகப்பெரிய பிரச்சனைகளை உண்டாக்கியது. கடந்த ஆண்டுக்கு முன் அந்தப் பிரச்சினைகளை ஓரளவு சமாளித்து வந்து திறமையாகவே ரன்கள் சேர்த்தார்.

ஆனாலும் பிரச்சனைகள் இவருக்கு களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேவும் நிறைய வர ஆரம்பித்தது. இடையில் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி ஓராண்டு வெளியில் வேறு இருந்தார். இதெல்லாம் சேர்ந்து இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரிய ஆபத்தை உருவாக்கி விட்டது.

- Advertisement -

தற்போது இவர் இங்கிலாந்து கவுன்டி அணியான நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக நடந்து வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தில் விளையாடி வருகிறார். எப்படியாவது தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்குள் மீண்டும் திரும்ப வந்து விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.

இந்த நிலையில் கிளவ்செஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சிறப்பாக விளையாடி இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடித்து 34 ரன்கள் சேர்த்தார். இவருடைய ஆட்டத்தில் எந்தத் தடுமாற்றமும் தெரியவில்லை. ஆனால் இவர் ஆட்டம் இழந்து வெளியேறிய விதம்தான் மோசமாக இருந்தது.

ஆட்டத்தில் 15ஆவது ஓவரை வான் மீகரன் வீசினார். கொஞ்சம் ஷார்ட் பாலாக வீசப்பட்ட பந்தை ஹூக் செய்ய முயன்ற பிரித்வி ஷா ஆட முடியாமல் தவறி ஸ்டெம்ப் மீது விழுந்து ஹிட் விக்கெட் முறையில் பரிதாபமாக ஆட்டம் இழந்தார். இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!