வீடியோ; பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மேட்ச் பிக்சிங்கா? ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி!

0
265
PSL

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் உள்நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.

இந்த வருடம் ஆறு அணிகள் பங்கேற்ற பிஎஸ்எல் தொடரில் லாகூர் மற்றும் முல்தான் சுல்தான் அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்தன. இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெசாவர் சல்மி இரண்டு அணிகளும் மூன்றாவது நான்காவது இடத்தை பிடித்தன.

- Advertisement -

இதில் மூன்றாவது நான்காவது இடத்தை பிடித்த அணிகள் நேற்று எலிமினேட்டர் சுற்றில் மோதின. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, பாபர் ஆஸம் தலைமையிலான பெஷாவர் சல்மி அணி பேட்டிங் செய்ய வந்தது.

இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் சயும் அயூப் பதினாறு பந்தில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கேப்டன் பாபர் ஆஸம் மிகச் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் சல்மி அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அலெக்ஸ் ஹேலஸ் 57 ரன்கள், சோகைப் மசூத் 60 ரன்கள் என எடுத்து இரண்டாவது விக்கட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தாலும், அதைத் தொடர்ந்து எடுத்துச் சென்று அதற்கு அடுத்து வந்த வீரர்கள் வெற்றியாக மாற்ற முடியவில்லை. இதனால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. வெற்றியின் மூலம் பாபர் அணி இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றது!

- Advertisement -

இந்த ஆட்டத்தின் போது முதலில் பெசாவர் சல்மி பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, ஆட்டத்தின் 13 வது ஓவரை இஸ்லாமாபாத் கேப்டன் சதாப்கான் வீச வந்து ஸ்டெம்ப் மைக்கில், இந்த ஓவரில் பாபர் அவுட் என்று கூறினார். அதேபோல் அந்த ஓவரின் ஐந்தாவது ஓவரில் நேராக வந்த ஒரு பந்துக்கு பாபர் எல் பி டபிள்யூ ஆனார்.

இந்த சம்பவத்தின் வீடியோ வெளியானதால் தற்பொழுது கிரிக்கெட் ரசிகர்கள் இது அப்பட்டமான மேட்ச் பிக்சிங் போல தெரிகிறது என்று தங்களது சந்தேகத்தை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள். இதற்கான வீடியோவும் ஒரு ட்விட்டர் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.