வீடியோ: கதிகலங்க வைக்கும் விபத்து.. அதிகாலையில் ரிஷப் பண்ட் செய்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது!

0
2822

ரிஷப் பண்ட் ஏற்படுத்திய விபத்தின் வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே உள்ள சொந்த ஊரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட் கார் விபத்துக்கு உள்ளானது. நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இடது கண்ணிற்கு மெல் பகுதி, காலில் ஜவ்வு கிழிசல் மற்றும் முதுகு பகுதியில் உராய்வு காயம் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தெரிவித்தார். இது முடித்தவுடன் மேல் சிகிச்சைக்கு டேராடூன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கேயும் முழு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் நடந்து வருகிறது.

பிசிசிஐ குடும்பத்தினருக்கும், பண்ட் சிகிச்சைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளது. சக அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டேராடூன் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குமார், விபத்து எப்படி நடந்தது? அதற்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார். முதல்கட்ட ஆய்வில், அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. காரை ஓட்டிவந்த ரிஷப் பண்ட் சிறிதளவு கண் அசந்ததால் நேர்ந்துள்ளது. விபத்தில் ரிஷப் பண்ட் தவிர வேறு எவருக்கும் அடிப்படவில்லை. ரிஷப் பண்ட்டே ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்து வரவழைத்திருக்கிறார். என தெரிவித்தார்.

- Advertisement -

அருகில் இருந்த கடைகள் மற்றும் போக்குவரத்து சிக்னல் சிசிடிவி கேமராக்களில் விபத்து குறித்த வீடியோ காட்சிகள் கிடைக்கிறதா? என்கிற ஆய்வு நடந்துவருகிறது. அதில் ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.