வீடியோ இணைப்பு ; பாபரின் பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடிய ரோகித் சர்மா வில்லியம்சன் மற்றும் உலக கிரிக்கெட் அணி கேப்டன்கள்!

0
857
Babarazam

16 அணிகளைக் கொண்டு வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி தகுதி சுற்று போட்டிகளோடு, எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது!

இந்தத் தொடரில் பிரதான லீக் சுற்றில் 12 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்படும். இந்த பிரதான லீக் சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மீதி தேவைப்படும் 4 அணிகளுக்காக 8 அணிகளை 2 குழுக்களாகப் பிரித்து, அந்த இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள், பிரதான லீக் சுற்றுக்கு கொண்டுவரப்படும்.

தகுதி சுற்று போட்டி அக்டோபர் 16ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்தச் சுற்றில் இலங்கை வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே அயர்லாந்து ஸ்காட்லாந்து நெதர்லாந்து நமீபியாமற்றும் யுஏஇ ஆகிய 8 அணிகள் விளையாடுகிறது.

பிரதான லீக் சுற்றுக்கு ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்று உள்ளன.

பிரதான லீக் சுற்றில் இரண்டு குழுக்களிலும் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து இறுதிப் போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் அணி தேர்வாகும்.

தகுதி சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி வரை நடக்கிறது. பிரதான லீக் சுற்று முதல் போட்டி ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 22-ஆம் தேதி துவங்கி, இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடந்து முடிகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி சந்திக்கிறது.

தற்போது தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து இந்த டி20 உலகக் கோப்பைக்கான தலா 2 பயிற்சி போட்டிகளில் 16 அணிகளும் விளையாட உள்ளன.

உலகக் கோப்பை தொடர் சம்பிரதாய முறைப்படி அனைத்து கேப்டன்களையும் ஒருங்கிணைத்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடத்தப்படும். இந்த நிகழ்வின் போது பாபர் பிறந்தநாளுக்கான கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் எல்லா நாட்டு அணி கேப்டன்களும் கலந்து கொண்டு பாபரின் பிறந்த நாள் நிகழ்வை சிறப்பித்தனர். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!