வீடியோ ; அவுட் இல்லாத பந்துக்கு அப்பீல் கேட்காமல் வெளியேறிய கேஎல்.ராகுல் ; தொடரும் சோகம்!

0
5593
Klrahul

எட்டாவது உலகக்கோப்பை தொடரில் இன்று குரூப் இரண்டில் இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டிக்கு இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய அதே அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்.

கடந்த முறை பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இருவரும் தடுமாறிய நிலையில் என்று இருவரும் பொறுப்பாக ஆரம்பித்தார்கள். கேஎல் ராகுல் முதல் ஓவரை விளையாட அந்த ஓவரில் 7 ரன் வந்தது. அதற்கடுத்த சுழற்பந்து வீச்சு ஓவரில் 4 ரன்கள் வந்தது.

இப்படி ஆட்டம் பொறுமையாக சென்று கொண்டிருக்க, நெதர்லாந்து அணியில் கொஞ்சம் வேகமாக வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் வான் மீக்கிரன் மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய ஒரு பந்தை கேஎல் ராகுல் அடிக்காமல் காலில் வாங்கினார். இதற்கு பந்துவீச்சாளர் நடுவரிடம் அவுட் கேட்க, நடுவர் அவுட் தந்தார்.

- Advertisement -

ஆனால் இதை எதிர்த்து கே எல் ராகுல் அப்பீல் செய்யாமல் ரோஹித் சர்மாவிடம் பேசி விட்டு வெளியேறினார். ரோகித் சர்மாவும் அப்பீல் செய்ய சொல்லவில்லை. பின்பு மறு ஒளிபரப்பில் பார்த்த பொழுதுதான் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது தெரியவந்தது. அவுட் இல்லாத ஒரு பந்துக்கு பரிதாபமாக கேஎல் ராகுல் அப்பில் கேட்காமல் வெளியேறியது ஆச்சரியமாக உள்ளது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.