வீடியோ… “அடி எப்படி இருக்கு?!” – தம்பி விக்கெட்டை தூக்கிய அண்ணன்; ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை!

0
791
Ipl2023

ஐபிஎல் 16வது சீசனில் 51வது போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது!

ஐபிஎல் வரலாற்றில் சகோதரர்கள் இருவர் கேப்டனாக மோதிக் கொள்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது!

- Advertisement -

முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை அண்ணன் குர்னால் பாண்டியா தேர்ந்தெடுத்தார். குஜராத் அணிக்கு துவக்கம் தரவந்த சுப்மன் கில் மற்றும் விருதிமான் சகா இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள். குறிப்பாக சகாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது.

குஜராத்தின் துவக்க ஜோடி முதல் விக்கட்டுக்கு 12.1 ஓவரில் 142 ரன்கள் சேர்த்தது. விருதிமான் சகா 43 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் மூலம் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சிறப்பாக விளையாடிய இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 51 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 21 ரன் எடுத்தார். முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு குஜராத் 227 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் மூன்றாவது விக்கட்டுக்கு களம் இறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 25 ரன் எடுத்து மோசின் கான் பந்துவீச்சில் அண்ணன் குர்னால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

தம்பி ஹர்திக் பாண்டியா வலுக்கொண்டு வேகமாக அடித்த பந்தை அண்ணன் குர்னால் பாண்டியா மிகச்சிறப்பாக கேட்ச் பிடித்தார். பந்து வந்த வேகத்திற்கு அதைப் பிடித்தது அவருக்கு கைகளில் வலியைக் கொடுத்தது.

ஆட்டம் இழந்தாலும் அண்ணனிடமே கேட்ச் கொடுத்தது தம்பி ஹர்திக் பாண்டியாவுக்கு சிரிப்பை வரவழைக்க, அவர் சிரித்தபடியே களத்தை விட்டு வெளியேறினார்.

ஐபிஎல் வரலாற்றில் அண்ணன் தம்பி இருவரும் கேப்டனாக மோதிக் கொள்வது இது முதல் முறை. சகோதரர் கொடுத்த கேட்சை இன்னொரு சகோதரர் பிடிப்பது இரண்டாவது முறை. இதற்கு முன் அண்ணன் யூசுப் பதான் கொடுத்த கேட்சை தம்பி இர்ஃபான் பதான் பிடித்திருந்தார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.