வீடியோ:;அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியாக ஹர்திக் பாண்டியா!

0
598

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .

அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. கடந்த போட்டியில் விளையாடிய கேமரூன் கிரீன் மற்றும் நேத்தன் எல்லீஸ் ஆகியோர் நீக்கப்பட்டு டேவிட் வார்னர் மற்றும் ஆஸ்டன் ஏகர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர் . இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை .அந்த அணிக்கு துவக்க வீரர்களான டிராவஸ் ஹெட் மற்றும் மிச்சல் மார்ஸ் சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

- Advertisement -

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஹெட் மற்றும் மார்ஸ் ஜோடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக 68 ரன்களை சேர்த்திருந்தது. கடந்த போட்டியில் ஆடியதைப் போலவே இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக ஆடினர் . இருவரும் அதிரடியாக ரன்களை சேர்த்ததோடு விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக ஆடியதால் இந்திய அணிக்கு ஆரம்ப கட்டத்தில் பின்னடைவாக அமைந்தது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிச்சல் மார்ஸ் மிகச் சிறப்பான பேட்டிங் ஆடி வருகிறார் . இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் வேகமாக ஸ்கோர் உயர்ந்தது. மார்ச் அதிரடியாக ஆட ஹெட் அவருக்கு பக்கபலமாக நின்று ஆடினார். இந்தியா அணியிடம் முதல் விக்கெட்டுக்கான தேடல் இருந்தது .

இந்நிலையில் ஆட்டத்தின் 11 வது ஓவரை வீச வந்த இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு முதல் விக்கெட் வீழ்த்தி கொடுத்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹெட் ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 13 வது ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் ஹர்திக் பாண்டியா. ஸ்டீவன் ஸ்மித் ரன்கள் எதுவும் எடுக்காமல் கே எல் ராகுல் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 14 வது ஓவரின் மூன்றாவது பந்தில் மிச்சல் மார்ஸ் விக்கெட்டையும் கிளீன் போல்டில் வீழ்த்தி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பினார் ஹர்திக் பாண்டியா. சிறப்பாக ஆடி இருந்த மார்ஸ் 47 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் ஒரு சிக்ஸரும் எட்டு பௌண்டரிகளும் அடங்கும். தற்போது ஆஸ்திரேலிய அணி 15.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருக்கிறது.