வீடியோ ; ஹர்திக் பாண்டியா கண்கலங்கி நெகிழ்ச்சி பேட்டி; நான் இதற்காக அழவில்லை!

0
7417
Hardikpandya

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய மிகப்பெரிய போட்டி நடந்தது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் வழக்கமான போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியும் திருப்பங்களுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கடைசி ஓவரின் கடைசி பந்தில் முடிந்தது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இப்திகார் மற்றும் ஷான் மசூத் இருவரது அரை சதங்களின் உதவியோடு 20 ஓவர்களின் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 31 களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் விராத் கோலியுடன் ஜோடி சேர்ந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்திக் பாண்டியா.

இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா முப்பத்தி ஏழு பந்துகளைச் சந்தித்து 40 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் 4 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த ஆட்டம் முடிவுக்குப் பிறகு என்றும் கலங்காத விராட் கோலியும் கண்கலங்கினார். அதேபோல் ஹர்திக் பாண்டியா ஆகும் என்று கண்கலங்கி விட்டார்.

அவர் கண்கலங்கியபடி பேசியது ” நான் என் அப்பாவைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என் மகனை நேசிக்கிறேன். ஆனால் எனக்காக என் அப்பா செய்ததை என் மகனுக்கு நான் செய்ய முடியுமா என்று தெரியாது. ஏனென்றால் என் ஆறரை வயதில் நாங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அவர் நகரத்தை மாற்றி வந்து கஷ்டப்பட்டார். இந்த நிலைக்கு நாங்கள் வருவோம் என்றெல்லாம் அவருக்கு அப்போது தெரியாது. இது அவருக்காக!” என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது!