வீடியோ; முன்னாள் கேப்டன் மோர்கன் முகத்தை பார்க்காத ஹேலஸ்; காரணம் என்ன?

0
15192
Hales

இன்று எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை எதிர்த்து சிட்னி மைதானத்தில் மோதியது!

இந்தப் போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை இருந்தது.

- Advertisement -

இப்படியான போட்டியில் இங்கிலாந்து அணி டாசை தோற்க, இலங்கை அணி முதலில் பேட் செய்து பவர் பிளேவில் அபாரமாக ரன் சேர்த்து ஆனால் பின்பு தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேலஸ் மிக அபாரமாக விளையாடி 47 ரன்கள் அடித்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் பவர் பிளே ஆறு ஓவர்களில் இங்கிலாந்து அணி 70 ரன்கள் குவித்தது. ஆனால் இறுதியில் இரண்டு பந்துகள் மீதம் வைத்துதான் வென்றது. பவர் பிளேவில் இவர் இந்த அளவிற்கு அதிரடியாக விளையாடாமல் இருந்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறாமல் போய் இருக்கலாம்.

போட்டியின் முடிவுக்குப் பிறகு அலெக்ஸ் ஹேலஸ் இடம் பேட்டி காணப்பட்டது. அப்பொழுது அவரின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அங்கு இருந்தார். அந்தப் பேட்டி மொத்தம் மூன்று நிமிடம் நடைபெற, ஒருமுறை கூட அலெக்ஸ் ஹேலஸ் இயான் மோர்கன் புறம் திரும்பவே இல்லை!

- Advertisement -

இதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்றால், 2019 இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக அதற்கு நான்கு ஆண்டுகள் முன்பிருந்தே மோர்கன் தலைமையில் ஒரு இங்கிலாந்து அணி உருவாக்கப்பட்டு வந்தது. இந்த அணியின் அதிகாரப்பூர்வ துவக்க ஆட்டக்காரராக அலெக்ஸ் ஹேலஸ் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அந்த உலகக் கோப்பை துவங்க இருந்த நிலையில் ஊக்க மருந்து பரிசோதனைகள் சிக்கிய அலெக்ஸ் ஹேலஸ் தண்டிக்கப்பட்டு உலகக் கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்பொழுது இயான் மோர்கன் இது அவர் அணிக்கு செய்த மோசமான துரோகம் என்று கோபப்பட்டு பேசியிருந்தார்.

தண்டனை காலம் முடிந்து அலெக்ஸ் ஹேலஸ் உலகின் பல டி20 லீக்குகளில் விளையாடி ரன்கள் குவித்த பொழுதும், அவரால் இங்கிலாந்து அணிக்குள் வர முடியவில்லை. இயான் மோர்கன் மனது வைத்தால்தான் எனக்கு இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என்று அலெக்ஸ் கூறி இருந்த போதும் கூட அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இப்படியான பிரச்சனைகள் இருவருக்கும் இடையில் நிலவியதால், இந்தக் காரணங்களால் இன்றைய பேட்டி நேரத்தில் தனது முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் முகத்தைக் கூட அலெக்ஸ் ஹேலஸ் திரும்பிப் பார்க்கவில்லை!