வீடியோ; ஜிம்பாவே உடன் தோல்வி ; கதறி அழுத பாகிஸ்தான் நட்சத்திர வீரர்!

0
1707
Pakistan

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் 12 அணிகளைக் கொண்டு பிரதான சுற்று நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் பிரதான சுற்றுக்கும் முன் நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டிகளே மிகவும் பரபரப்பு திருப்பமும் நிறைந்ததாக அமைந்திருந்தது. நமீபியா அணி இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளிடம் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இதற்கு அடுத்து துவங்கிய பிரதான சுற்றுப்போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை மிகச் சுலபமாக நியூசிலாந்து அணி வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அதற்கு அடுத்து அயர்லாந்து அணி இந்த தொடரில் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணியை வென்றது.

இப்படி இந்த உலகக் கோப்பை தொடர் யாரும் எதிர்பார்க்காத பரபரப்பு திருப்பங்களோடு கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒரு உலகக் கோப்பை தொடராக மாறி வருகிறது. மிகக்குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்திருந்தது.

இப்படியான நிலையில் நேற்று பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த ஒரு போட்டி இதே வரிசையில் வந்து சேர்ந்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாபே அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 130 ரன்கள் சேர்த்து சுருண்டது.

இதற்கடுத்து களம் கண்ட பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. டி20 கிரிக்கெட் இல் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர்களாக விளங்கி வரும் பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் இருவரும் சொற்பரன்களில் வெளியேற அடுத்து வந்த வீரர்களும் நிலைக்கவில்லை.

இறுதியாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், பாகிஸ்தான் அணியால் அந்த ஓவரில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மிகவும் பரபரப்பான ஒரு ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் அணி இந்த தொடரை விட்டு வெளியேறுவது ஏறக்குறைய முடிவானது ஒரு புறம் இருந்தாலும், ஜிம்பாப்வே அணி அரையிறுதிக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பு இதற்குள் இருப்பது முக்கியமான விஷயம்.

இந்த தோல்வியை யாரும் எதிர்பார்க்காத பொழுது, பாகிஸ்தான அணி முதல் போட்டியில் இந்திய அணி உடன் மிக நெருக்கமான போட்டியில் தோல்வி கண்டிருந்ததால், ஜிம்பாப்வே அணி உடன் ஏற்பட்ட இந்த தோல்வி பாகிஸ்தான அணி வீரர்களை மனதளவில் நொறுங்க செய்து விட்டது. இந்த ஆட்டத்தின் தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுற்பந்துவீச்சாளர் சதாப் கான் மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழ அவரை ஒருவர் தேற்றி அனுப்பி வைப்பதை, ரசிகர் ஒருவர் காணொளி எடுத்து இணையத்தில் ஏற்ற அது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.