வீடியோ; டேவிட் மில்லரை ரன்-அவுட் செய்யாமல் விட்ட அஸ்வின்!

0
3866
Ashwin

எட்டாவது டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் பர்த் மைதானத்தில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகும்!

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கே எல் ராகுல் கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி ஹர்திக் பாண்டியா தினேஷ் கார்த்திக் யாரும் பேட்டங்கில் ஜொலிக்கவில்லை. சூரியகுமார் யாதவ் மட்டும் மிகச் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் எடுத்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான நெருக்கடியைத் தந்தார்கள். ஆனால் இந்திய அணியின் களத்தடுப்பு சிறப்பாக இல்லை. இந்தக் காரணத்தால் இந்திய அணி கடைசி ஓவரில் தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம் மற்றும் மில்லர் இருவரும் அரை சதம் அடித்தார்கள்.

இந்த ஆட்டத்தில் முக்கியமான 18 வது ஓவரின் கடைசிப் பந்தை அஸ்வின் வீசும் போது, பந்தை வீச வந்து நிறுத்திவிட்டார். அப்பொழுது டேவிட் மில்லர் கிரீசுக்கு வெளியே கொஞ்சம் நின்றார். ஆனால் அஸ்வின் அவரை ரன் அவுட் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு, அடுத்த பந்தை வீச சென்று விட்டார்.

ஆனால் இப்படிப்பட்ட ரன் அவுட் செய்ய அஸ்வின் எப்பொழுதும் தயக்கம் காட்டியதே கிடையாது. தற்காலத்தில் இப்படியான ரன் அவுட் ஐசிசி விதிப்படி நாகரிகமான ஒன்றாக அறிவிக்கப்பட்டதற்கு அஸ்வினும் ஒரு முக்கியக் காரணம் எனலாம். அப்படி இருந்தும் கூட அஸ்வின் இந்த ரன் அவுட்டை செய்யவில்லை. மேலும் இந்த ஓவரில் டேவிட் மில்லர் இரண்டு சிக்ஸர்களை நொறுக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -

இந்திய அணி அடுத்து பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்த்து விளையாடுகிறது. இந்த இரு அணிகளையும் இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறது என்று கூறலாம். ஆனால் தென்னாபிரிக்கா அணி அடுத்து பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியுடன் விளையாடுகிறது. இந்த இரண்டில் ஒரு ஆட்டத்தை வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்குள் வந்துவிடும்.